ltte.

அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்…!

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தி அவர்களை ஒடுக்கும் ஒரு வழமையான ஸ்ரீலங்கா ஆட்சியே என தன்னை அம்பலப்படுத்தியுள்ளது மைத்திரிபால சிறிசேன – ரணில் ஆட்சி. இன அழிப்பின் நுண்மையான பின்னணிகளை கொண்டது திடீர் மரணங்கள், இனம் தெரியாத நோய் என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் சாவுகள் மறைக்கப்பட்டுகின்றன.

2009 இன அழிப்பிற்கு பிறகு குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பை சேர்ந்த மக்கள் போராளிகள் நுற்றுக்கணக்கானவர்களின் மரணங்கள் பெரும் சந்தேகத்திற்குரிய முறையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய். அத்துடன் இதயநோய் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள். அதை விட முக்கியமானது எமது மக்கள் சந்திக்கும் உளவியற் பிரச்சினைகள்.

தமிழ் இனத்தின் தனித்துவத்தை உருக்குலைத்து அவர்களின் மரபு வழி தாயகத்தில் அரச முனைப்புடனான குடியேற்றங்களை உருவாக்கப்படுகின்றது. நிலத்தையும் இழந்து. வாழ்வாதாரத்தையும் இழந்து. பெரும் பொருண்மிய சிக்கலிற்குள் தவிக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறை நிலவும் நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு சுதந்திரமாக, சுயநிர்ணய உரிமையுடனும், நீதியுடனும் வாழமுடியும்?

இனஅழிப்பு நோக்கிலான அரச எந்திரத்தின் செயற்பாடு ஏழு ஆண்டுகளாகியும் நடந்த இனஅழிப்பை மறைக்கவும் தொடர்ந்து இனஅழிப்பை நடத்தவும் எதையுமே “உள்ளக” விசாரணை என்ற போர்வைக்குள் செய்ய முற்படுகிறது இனஅழிப்பு அரசு. இனப்படுகொலை இலங்கை அரசு 2009 போரில் தமிழர்களின் மீது தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை போட்டார்கள் என்று கடந்த மாதம் தி கார்டியன் பத்திரிக்கை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.

இலங்கையில் போர் தொடங்கி தீவிரமாகிக்கொண்டிருந்த நேரமான 2008 காலகட்டத்தில் ”ஜீலை 09 ‘2008 ல் அமெரிக்காவின் இராணுவ தரப்பிலிருந்து அதன் செயலாளார் Robert Gates கையெழுத்திட்ட ஒர் அறிக்கை வெளிவந்தது. அதில் கிளஸ்டர் குண்டுதான் இராணுவத்திற்க்கு ஏற்ற ஆயுதம். அதுவே அமெரிக்கர்களின் உயிரை காக்கவும், இலக்குகளை எந்தவித ரிஸ்க் இல்லாமல் அடையவும் உதவுகிறது. போரின்போது இந்த ஆயுதத்தை பயன்படுத்துவதால் திட்டமிடப்படாத இலக்குகளை குறைக்க முடியும். மேலும் மக்கள் அமைப்பாக ஒன்றுசேருவதை குறைந்தளவு சேதத்தின் மூலம் தடுக்க முடியும் என்றும், அதனால் கிளாஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவது நல்லதென்றும் அறிக்கையினை வெளியிட்டிருந்தார்.

இதனை தான் தனக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு இனப்படுகொலை இலங்கை அரசு 2009 ல் தமிழ் மக்கள் மீது இந்த தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை போட்டது. உலகநாடுகள் விடுதலைப் போர்களை எப்படிப் பார்த்தன, பார்க்கின்றன என்பதை நாம் முதலில் பார்க்கவேண்டும். ஆபிரிக்க விடுதலைப் போரை பிரித்தானியா – பயங்கரவாதம்’ என்றது. வியட்னாம் விடுதலைப் போரை அமெரிக்கா – பயங்கரவாதம்’ என்றது. அல்ஜீரிய மக்களின் விடுதலைப் போரை பிரான்ஸ் – பயங்கரவாதம்’ என்றது.

செச்சினிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ரசியா -பயங்கரவாதம் என்கிறது. திபெத்திய மக்களின் விடுதலை உணர்வை சீனா -பயங்கரவாதம்’ என்கிறது… பாலஸ்தீன விடுதலைப் போரை இஸ்ரேல் – பயங்கர வாதம்’ என்கிறது. குர்தீஸ் மக்களின் விடுதலைப் போரை துருக்கி – ‘பயங்கரவாதம்’ என்கிறது. இப்படியே பட்டியல் நீள்கிறது. திரை மறைவு யுத்தங்களை மட்டுமே நம்புகின்ற கோழைத்தனமான உலக ஜனநாயகம் ஆயுதப் புரட்சியைப் பார்த்து அச்சம் கொள்வதை”..- தமிழினம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்…!

உரிமைகளை மீட்பதற்காக ஆயுதங்களின் உதவியுடன் போராடுகின்ற போராளிகளை. “கொடூரமான மனிதர்களாகவும், இம்மாதிரியான போராளிகளை விட்டு வெகுதூரம் விலகி நிற்பவர்களை “மிகவும் தூய்மையான மனிதர்களாகவும் ” -தற்போதைய உலகத்தினால் சித்தரிக்கப்படுகிறது..! “நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகப் போராடும்போது, அந்தப் போராட்டங்களை ஆயுதங்களினால் தடுத்து நிறுத்துவதற்கு ஜனநாயகம் முற்படுமானால் அந்தப் போராட்டக்காரர்களும் நிச்சயமாக ஆயுதங்களை கையிலெடுப்பார்கள்” என்பதை எந்த வகையில் தவறென்று கூற முடியும்…? இனத்தின் உரிமை பற்றிப் பேசினால் இனவாதி (Racist) இனத்தின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசினால் பயங்கரவாதி (Terrorist) இதுதான்

வல்லரசு நாடுகளின் சித்தாந்தம். உணர்விழந்த நீதி “யுத்தகளத்தை மீளத்திறக்கும்” தமிழர்கள் விடுதலைகோரி போராடினால் அது பயங்கரவாதம் போராடாதீர்கள் என்கிறது பொய்யான உலகநாடுகள் ஆனால் இதே உலகநாடுகள் தங்கள் அரசியல், பொருளாதார, பூகோள நலன் சார்ந்து இன்றும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அழிப்பவன், வன்வலுவைப் பாவிக்கும்போது, இராஜதந்திரம் ( Diplomacy ) இராஜதந்திர ரீதியில் ( Diplomatically ) என்ற மாயையில் நாம் மென்வலு பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.

ஈழத்தமிழ் மக்களின் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் முகமாகவே சிறிலங்காவின் பௌத்த ஆட்சியாளர்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈழத்தமிழ் மக்களை சிறிலங்கன் என்கின்ற அடையாளத்திற்குள் உட்படுத்துவதே சிங்கள அரசினதும் அதன் அடி வருடிகளினதும் நோக்காகும். 2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட கையோடு தமிழ் மக்களை தோல்வியடைந்தவர்களாகப் பார்த்த தென்னிலங்கை, அவர்களை ஆக்கிரமித்து அடிமைகளாக, தங்களது கண்காணிப்பில் வைத்திருப்பதற்கான திட்டத்தை அப்போதே நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருந்தது.

1978ல் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டமானது ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மிகவும் மோசமானதாக காணப்பட்டது. இந்த நிலை தற்போதும்சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலும் தொடர்கிறது’ பயங்கரவாதப் பொறிமுறையானது தமிழ் மக்களை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை.

சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான இராணுவ முகாமினுள் கொண்டு செல்லப்பட்டுள்ளனவே தவிர பிரதான முகாம்கள் அகற்றப்பட்டு அந்த நிலங்கள் மக்களுக்கு இன்றுவரை கொடுக்கப்படவில்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டத்தில்லிருந்து தமிழர் தாயகம் சிங்கள அரசாலும் அதன் அரக்கர் படையாலும் மற்றும் துரோகிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கை, கல்வி, சொத்துக்கள் மற்றும் அபிவிருத்தி, கட்டுமானம் போன்ற அனைத்து விடயங்களிலும் இவர்களின் தலையீடு காணப்படுகிறது.

தமிழர் பகுதிகளில் இப்போது ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழர் நிலப்பகுதியில் மக்களின் காணிகளில் பாரிய இராணுவ முகாம்களை நிறுவுவதன் மூலமும், தமிழர் காணிகளை அபகரிப்பதன் மூலமும், அவர்களது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதன் மூலமும், சிவில் விடயங்களில் தலையிடுவதன் மூலமும் தமிழ் மக்களை சிங்கள அரசாங்கம் ஆக்கிரமித்துள்ளது.

வாக்குறுதிகளை கொடுத்து மக்கள் போராட்டங்களை அடக்கிவிட்டு காலத்தை கடத்துவதிலேயே ‘நல்லாட்சி’ அரசு செயற்படுத்திவருகிறது. மக்களது அடிப்படை பிரச்சினைகளையே ஒருவருடத்திற்கு மேல் தீர்க்கமுடியாதவர்கள் எப்படி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு தருவார்கள்? தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கிவரும் இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் என சிலர் இன்னமும் கூறிவருகிறார்கள்.

இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தரும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது ? மாயமானைக் காட்டி’, ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தை திசைதிருப்புவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள். உலக நாடுகளைச் சுற்றிச் சுற்றி மிக வேகமான பரப்புரை, வேலைத்திட்டம், மறுபுறம் உள்ளேயே சிதைக்கும் நிகழ்ச்சிகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா பாராளுமன்றின் மடியில் எதிர்க் கட்சி பதவியையும் வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருகிறார்கள் என மக்கள் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ்த் தலைமைகள் சிங்கள அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு தமது வயிறு வளர்ப்பதிலேயே அக்கறையாக உள்ளார்கள். தமிழனை காட்டிக்கொடுத்தால் சலுகை, தமிழர் நிலங்களை தாரைவார்த்துக்கொடுத்தால் சலுகை, தமிழனின் தலைமைத்துவங்களை விட்டுக்கொடுத்தால் பின்கதவால் பெரும் சலுகை. இப்படி ஏகப்பட்ட சலுகைகளை பெற்று கொஞ்சங்கூட இவர்கள் மனதில் எம் தமிழ் உறவுகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்காது இருந்து கொண்டு திரும்ப திரும்ப

அரைத்த மாவை அரைப்பது போல் பொய்யான போலி வார்த்தைகளுடன் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர் என போரின் வடுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தினம் தினம் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். எங்களிடம் திறப்பு இல்லை. 2016 இற்குள் தீர்வு கண்டு வெற்றி வாகை சூடுவதற்காகத்தான் நாங்கள் இப்பவும் இதயங்களால் இணைஞ்சு இருக்கிறம்.

ஆட்சி மாற்றம் வந்து நல்லிணக்கம் ஏற்பட்டு, கலப்பு நீதிமன்ற விசாரணை, சர்வதேச விசாரணைகளை எல்லாம் வெற்றிகரமாக வெட்டியோடி. இனப்படுகொலைக்கான ஆதாரங்களையும் திரட்டி, அரசியல் கைதிகள் என்று எவருமில்லை என ஜனாதிபதியைக் கூற வைத்து, தமிழிலை தேசிய கீதம் பாடி நாங்கள் கண்ணீர் மல்கி, ஸ்கொட்லாந்துக்குப் போய் ஆட்சி முறைமை சம்பந்தமாக எங்கட அறிவைப் பெருக்கியிருக்கிறம் என்றவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைபு தன் அழிவுப்பாதையை நோக்கி நகர்கிறது.

இலங்கை அரசுக்கு பக்க வாத்தியம் வாசிக்கும் தமிழ்த் தலைமை கும்பல்கள் வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு தொடர்பில ஒரு கருத்தும் அதே அரசு தொடர்பில் சர்வேதச சமூகத்திடம் இன்னுமொரு கருத்தையும் சொல்லி மக்களை ஏமாற்றுவது மணலாறு, மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை பகுதி எங்கும் நடக்கும் சிங்கள குடியேற்றங்கள் இவற்றை தடுத்து நிறுத்த திராணியற்ற பிண்டங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைபினர்.

குறைந்த பட்சம் எதிர்க் கட்சித் தலைவரின் ஊரில் நடக்கும் கிண்ணியா, கோணேஸ்வரம், திரியாய் பகுதி பிரச்சினைகள் பற்றி கூட இவர்களால் யோசிக்க முடியாமல் இருபது ஏன் ??? எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தென்ன காலத்திற்கு காலம் துரையப்பாக்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழ் மக்களை எப்படி ஏமாற்றித் தங்கள் அரசியல் நோக்கை எட்டிக் கொள்ளலாம் எனும் நோக்கில் செயற்படும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களை கையாள்வது எப்படி என்ற ஆலோசனைகளை சுமந்திரன் கொடுக்கும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்திரமாகத் திரித்துக் கூறி ஏமாற்ற முயல்கிறார். இவ் இரண்டுமே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்துக்குப் பாதகமானது.

தமிழ் மக்களின் பாரம்பரிய, தமிழ் பண்பாட்டு பூமியில் அதற்கு மாறான இன, மத அடையாளங்களை நிறுவுவதும் ஒரு வகையில் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்கும் செயலாகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கொக்கிளாயில் தற்போது நிறுவப்படும் புத்த விகாரையைக் குறிப்பிடலாம். ஆக, அறிவழிப்பு, சரித்திர அழிப்பு, பண்பாடழிப்பு வெவ்வேறு வடிவங்களில் இன்னும் தொடர்கிறது என்பதே மிகவும் அதிர்ச்சியூட்டும் கொடூரம். இதுவே, இருபதாம் நூற்றாண்டின் மிகக்கொடிய இன, வன்முறை இன்னமும் புரிந்துகொள்ளப்படாதிருக்கிறது.

தமிழ் மக்களின் அடிப்படை கல்விச் சிக்கல்கள் இனவாத அரசின் கோரப்படியில் இன்னமும் அப்படியே மாற்றப்படாமலே தரப்படுத்தல், சம உரிமை, சம வாய்ப்பு, உயர் கல்வி வாய்ப்பு, பாரபட்சம் அற்ற வேலைவாய்ப்பு போன்ற பல கல்வி சார் சிக்கல்கள் தமிழர்க்கு தீர்க்கப்படாமல் வெறுமனே கல்வியை கற்க சொல்லி போதிப்பதில் பலனேதும் இல்லை. கல்விமான்களை விட போராளிகளே எம் மண்ணிற்கு இன்றைய தேவை. மௌனம் கலைத்து மீண்டும் கருத்தரிக்கும் ஈழ விடுதலைப்பயணம்.

சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை என்றார் தமிழீழத் தேசியத்தலைவர். அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள். நீதிக்கான போராட்டம் காலவரையற்றது. நாம் அனைவரும் தொடர்ந்தும் போராடுவோம். கற்றவர்களால் தான் விடுதலை கிடைக்கும் என்றால் இந்த உலகில் உள்ள நாடுகள் எல்லாமே அடிமை தேசங்களாகவே இருந்திருக்க வேண்டும்.

ஏட்டுக் கல்வி கற்றவர்கள் சாதித்ததை விட புரட்சியாளர்கள் சாதித்த மாற்றங்களே மக்களுக்கு விடுதலையை வென்றெடுத்து கொடுத்து இருக்கின்றன. ஒரே இலட்சியத்தில், ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக, எமக்கு முன் தடைக்கல்லாக உருவாகியிருக்கும் எல்லாத்தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதி கொண்ட வேங்கைகளாக மூச்சோடும் வீச்சோடும் விடுதலையை வென்றெடுக்கும் வரை நாம் ஒருபோதும் ஓயோம். இலட்சிய பயணத்தில் இருந்து தடம் புரலாது தொடர்ந்தும் தாயக விடுதலைக்காக போராடுவோம்.

அன்று சிங்கள தேசத்திற்கு தமிழரால் ஒரு செய்தி சொல்லப்பட்டது.! “எந்த ஒரு காலத்திலும் எங்கள் மேல் விதைத்த துன்பத்தை, உங்கள் மேல் ஒருநாள் நாமும் விதைப்போம்” என்பதே சிங்களத்திற்கான தமிழரின் செய்தியாகும்.! இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். சிங்கள பௌத்த பேரினவாத அரசின் ஆயுத பயங்கரவாதத்தில் இருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காக வரலாற்று தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் முள்ளிவாய்காலில் தற்காலிகமாக மௌனிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் தாங்கள் அனைவரும் இராணுவத்தின் முற்றுகைக்குள் இருப்பதாக தமிழ் மக்கள் உணரத் தொடங்குவர் அப்போது இராணுவத்தின் முற்றுகையை உடைத்துக்கொண்டு ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் தலைமுறைகள் மீண்டும் தலையெடுக்கும். நான் முன்னேறி சென்றால் என்னை பின் தொடர்ந்து வா நான் சரணடந்தால் என்னை சுட்டு வீழ்த்து. நான் இறந்து போனால் என்னை விட்டுவிட்டு செல். நாம் பிரிந்து நிற்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒற்றுமையாக இருக்க எம் நீதியான போராட்டம் ஒன்று போதும்!

பொது எதிரிக்கு எதிராக அனைத்து போராட்ட சக்திகளும் நான் பெரிது நீ பெரிது என்ற வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து வலிய போராட்ட சக்தியாக உருமாற வேண்டும். இலக்குகளும் இலட்சியங்களும் உறுதியாக இருந்தால் மட்டுமே எத்தனை தடவை விழுந்தாலும், எத்தனை தடவை தோற்றாலும் திரும்பவும் எழுந்து பயணிக்க முடியும்.

(www.eelamalar.com)