அண்டைநாடுகள் முதல்
ஐநா வரை எவனும் எமது
கோரிக்கைகளுக்கு
செவிசாய்க்கவில்லை.

எத்தனை வருட ஆயுதபோராட்டம்
எத்தனை போராளிகள் வீரச்சாவு
எத்தனை பொதுமக்கள் சாவு

எத்தனை தடைகள்
எத்தனை நெருக்குவாரங்கள்
எத்தனை காட்டிகொடுப்புகள்
எத்தனை அகிம்சை போராட்டங்கள்
எத்தனைமுறை கோரிக்கை
எத்தனைமுறை முறைபாடு

எத்தனை உண்ணாவிரதம்
எத்தனை தீக்குளிப்பு
எத்தனை கடிதங்கள்
எத்தனை ஒன்றுகூடல்
எத்தனை கவனயீர்ப்பு
எத்தனை பேரணி
எத்தனை நினைவேந்தல்
எத்தனை உயிரிழப்பு
கொஞ்சமா நஞ்சமா
எத்தனை எத்தனை
அண்டைநாடுகள் முதல்
ஐநா வரை எவனும் எமது
கோரிக்கைகளுக்கு
செவிசாய்க்கவில்லை.

மிகப் பழமையான காலாச்சாரம்,தனித்துவமான பண்பாட்டு விழுமியங்களுடன் வாழ்ந்த பெருமைமிக்க தமிழினம் கடைசியில் துரோகம்,விதவைகள்,அகதிகள்,காட்டிகொடுப்புகள்,கேளிக்கைகளில் நாட்டம் என்ற வட்டத்தில் சுருங்கி விடுமோ?

நீதிக்கும் நேர்மைக்கும்தான் உலகமென்று
எழுதியவன் எங்கே எடுப்பதை எடுத்தால்தான் நீதி வரும் இங்கே.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
பிரபாசெழியன்.