அதிமுக உடைக்க முயலும் மோடியின் திட்டம் பலிக்காது!-நடராஜன்

தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார். மேலும் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடராஜன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  சசிகலா முதல்வர் ஆவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் பேசிய நடராஜன்  செய்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக உடைக்க முயலும் மோடியின் திட்டம் பலிக்காது என நடராஜன் கூறியுள்ளார். தமிழகத்தை காவிமயமாக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சி எடுபடாது எனவும் அவர் தெரிவித்தார்.

விழாவில் மேலும் பேசிய நடராஜன் நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என்றும் நாங்கள் மாட்டேன் என சொல்லவில்லை என்றும் நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் இறந்த பிறகு ஜெயலலிதாவுக்கு நாங்கள் தான் பாதுகாப்பாக இருந்தோம் என்றும் நடராஜன் தெரிவித்தார்.