அதில்மட்டும் சமரசமில்லை..

விடுதலை அமைப்பில் அண்ணையின்ற சொல்லுக்கு அவர் ஒரு கட்டளையை பிறப்பிக்கும்போது ஒரு அலுவலை சொல்லும் போது அது எவ்வளவு கடிமான பணி எண்டாலும் எவ்வளவுதான் அதில் பிரச்சினை எண்டாலும் அது எவ்வளவு சிக்கல் நிறைந்த பணியென்றாலும் தலைவர் அதை சொல்லும்போது முக்கியமான தளபதிகள்,பொறுப்பாளர்கள் முதல் கடைநிலை போராளிவரை தலைவரின் சொல்லுக்கு ஓமண்ணை. என்பதுதான் பதிலாக இருக்கும்.ஆனால் இதுவே தலைவரின் பாதுகாப்பு,தலைவரை பாதுகாக்கின்ற விடயம்,தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் எண்டால் இதே தளபதிகள் போராளிகள் தலைவரின் சொல்லுக்கு மறுப்பு சொல்லுவினம்.

ஏனென்றால் தலைவர் எப்போதுமே தண்ட உயிரையோ பாதுகாப்பையோ பெரிதாக எப்போதுமே எண்ணுவதில்லை.இங்கே ஒரு நிகழ்வை கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஒருமுறை பெண் எழுத்தாளர் ஒருவர் தலைவருடன் நேர்கணல் செய்ய விரும்பி அதை தலைவருக்கு தெறியபடுத்தி தலைவரும் சம்மதம் தெறிவித்து அதற்கான ஒழுங்குகள் செய்யபட்டு நேர்கணல் பின்நேரம் 4.30க்கு தொடங்குகின்றது அது நீண்டுகொண்டே இரவு நேரம்7மணியை நெருங்குகின்ற தருவாயில் அண்ணையின் பாதுகாப்புக்கு நிண்ட போராளி கானும் இத்துடன் முடித்து கொள்ளுங்கள் நாங்கள் போக வேணும் என்கின்றார்.அதற்க்கு அந்த பெண் எழுத்தாளர் இருங்கோ இன்னும் கதைக்க வேனும் அண்ணணே ஆவலாக கதைத்து கொண்டிருக்கின்றார் நீங்கள் ஏன் நிறுத்தசொல்லுறியள் என்று கேட்கிறார்.அதற்க்கு அந்த போராளி விட்டால் இவர் விடிய விடிய கதைத்துக்கொண்டிருப்பார் பாதுகாப்பு காரணங்களுக்காக அதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று கூறி நாங்கள் போவம் அண்ணை என்கின்றார்.தலைவரும் புன்முறுவலோடு அதை ஆமோதிக்கின்றார்.தலைவரே கதைக்க விரும்பினாலும் அந்த இடத்தில் அந்த போராளி அதை அனுமதிக்க வில்லை காரணம் தலைவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடமை.

கடைநிலை போராளிமுதல் முதல்நிலை தளபதிமார்வரை தலைவரை பாதுகாக்கும் விடயத்தில் எந்தவொரு சமரசத்திற்கும் அவர்கள் இணங்குவதில்லை.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
பிரபாசெழியன்.