அனந்தியும், சிவகரனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்!

வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இளை­ஞர் அணி­யின் முன்­னாள் செய­லர் சிவ­க­ரன் இரு­வ­ரை­யும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வது என்று அந்­தக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் ஏக­ம­ன­தாக முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் கொழும்­பில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. ஏற்­க­னவே ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் சிவ­க­ரன் இரு­வ­ரை­யும் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கும் தீர்­மா­னம் அதில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

சிவ­க­ரனை மாத்­தி­ரம் இப்­போது நீக்­க­லாம். அனந்தி சசி­த­ரன் பற்­றிப் பின்­னர் பார்த்­துக் கொள்­ள­லாம் என்று யோசனை அப்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. நட­வ­டிக்கை எடுப்­ப­தா­யின் இரு­வ­ருக்­கும் எதி­ரா­கவே நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்ற கருத்­தும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இறு­தி­யில் இரு­வ­ரை­யும் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வது என்று ஏக­ம­ன­தாக முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­பது என்று இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி தீர்­மா­னம் எடுத்த பின்­னர் அதனை மீறி இவர்­கள் இரு­வ­ரும் செயற்­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டே ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.