அன்னையும் அண்ணனும் நீயே…..நீயே……
ஆயிரம் எரிமலை
அடைகாத்த பெரு நெருப்பு நீயே…..நீயே…..
ஆகத்தமிழரின்
ஆருயிர் நிகர் விருப்பு நீயே…..நீயே…..
ஆற்றார ழித்த நல்
ஆனகப் பேரொலி நீயே…..நீயே…..
ஆற்றாமைக் காரிருள்
அகற்றும் பேரொளி நீயே…..நீயே…..
ஆவியம் போக்கிட
அஞ்சா ஆன்றோன் நீயே…..நீயே…..
ஆலால மணிந்தநல்
அறநெறி ஆசிரியன் நீயே…..நீயே…..
ஆர்த்தர் பிணிபோக்கும்
அருமருந்து டையோன் நீயே…..நீயே…..
ஆழிப்படை சமைத்த
ஆர்மைமதி நிறைந்தோன் நீயே…..நீயே…..
ஆளுமைத் தமிழோர்தம்
அரிய நல் அடையாளம் நீயே…..நீயே…..
ஆலமறியா புலிவீரம்
அவனி அறியச்செய்தவன் நீயே…..நீயே…..
ஆர்ப்பரித்தெழச் செய்த
அடலேறு தாய்புலி நீயே…..நீயே…..
ஆட்சி நிகழ்ந்தீழத்தில்
அரிமா கிழித்தெறிந்தவன் நீயே…..நீயே…..
ஆற்றல்நிறைத் தமிழ்க்குடி
அரும்பெரும் தலைவன் நீயே…..நீயே…..
ஆவல்நிறைத் தமிழீழ
அரணும் பே ரரசனும் நீயே…..நீயே…..
ஆகச்சிறந்த எந்தமிழர்
அன்னையும் அண்ணனும் நீயே…..நீயே……
பாலசந்திரன்