அன்னை தமிழ் ஈழ மண்ணே உன்னை அள்ளி முத்தமிட ஓடி வருவேன் உன் மடியில் வந்து நான் விழ வேண்டும் என்னை மறந்து விம்மி விம்மி அழவேண்டும் அன்னை தமிழ் ஈழ மண்ணே என் மண்ணே
அன்னை தமிழ் ஈழ மண்ணே உன்னை அள்ளி முத்தமிட ஓடி வருவேன்
உன் மடியில் வந்து நான் விழ வேண்டும் என்னை மறந்து விம்மி விம்மி அழவேண்டும்
அன்னை தமிழ் ஈழ மண்ணே என் மண்ணே ….ஏ….ஏ … .. .
எங்கு வாழ்ந்தாலும் உலகினிலே நான் ஏதிலி என்ற பேர் தாங்குகிறேன் (2)
கண்கள் குளமாக ஏங்குகிறேன் நான்
கனவிலும் அளுது தூங்குகிறேன் (2)
அன்னை தமிழ் ஈழ மண்ணே உன்னை அள்ளி முத்தமிட ஓடி வருவேன் உன் மடியில் வந்துநான் விழ வேண்டும் என்னை மறந்து விம்மி விம்மி அழவேண்டும் அன்னை தமிழ் ஈழ மண்ணே என் மண்ணே …..ஏ .…ஏ …..
செக்கச் செவேலென்று செம்பருத்தி பூக்கள் சிரித்திடும் என் வீட்டு முற்றம் எங்கே (2)
அக்கா தம்பி என்று முற்றத்திலே தாயம் ஆடி மகிழ்ந்த எம் சுற்றம் எங்கே (2)
அன்னை தமிழ் ஈழ மண்ணே உன்னை அள்ளி முத்தமிட ஓடி வருவேன் உன் மடியில் வந்து நான் விழ வேண்டும் என்னை மறந்து விம்மி விம்மி அழவேண்டும் அன்னை தமிழ் ஈழ மண்ணே என் மண்ணே …..ஏ…..ஏ…..ஏ..
கோடி கோடி இங்கே குவிந்தாலும் இந்த கோடியும் மாடியும் என் நாடாகுமா (2)
ஆடி வறுமையில் நான் வாழ்ந்த நாளிலும் அன்னை மண் தந்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா
அன்னை மண் தந்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா
அன்னை தமிழ் ஈழ மண்ணே உன்னை அள்ளி முத்தமிட ஓடி வருவேன் உன் மடியில் வந்து நான் விழ வேண்டும் என்னை மறந்து விம்மி விம்மி அழவேண்டும் அன்னை தமிழ் ஈழ மண்ணே என் மண்ணே …..ஏ…..ஏ.. .
நேரில் நான் வரும் நாள் வரைக்கும் உன் நினைவே உயிராக வாழ்வேனம்மா (2)
போரில் நீ வெல்லும் நாள் வரைக்கும் நான் புலிகளுக்கே துணை போவேனம்மா நான் புலிகளுக்கே துணை போவேனம்மா அன்னை தமிழ் ஈழ மண்ணே உன்னை அள்ளி முத்தமிட ஓடி வருவேன் உன் மடியில் வந்து நான் விழ வேண்டும் என்னை மறந்து விம்மி விம்மி அழவேண்டும் அன்னை தமிழ் ஈழ மண்ணே என் மண்ணே …..ஏ………………