இருமலர்கள்
அன்பின் வெளிப்பாடு
அண்ணன் முகத்தில்
அகம் மகிழ்ந்தே சிரிக்கின்றது
அழகிய மலரொன்று “”
பூகம்பம் கூட
பொறுமை கொள்ளும்
புயலும் அமைதி கொள்ளும்
புன்னகை மன்னன்
புன்சிரிப்பில் “”
பாசத்தை பகிர்ந்தே
பருகிட வைக்கும்
பாசத் தலைவன்
பாரினில் எங்குண்டு “
பூத்துக் குலுங்கும்
பொன் வண்ணத்தின்
புன்னகை பூகம்பத்தின்
வெளிப்பாடே ‘
ஈழமலர் செய்திக்காக ஈழவன் தாசன்