அரசியல் நாடகம் முதலாம் பாகம் நிறைவு –றெஜினோல்ட் கூரே!

வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலையின் முதலாம் பாகம் நிறைவடைந்துவிட்டதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் மீது தமிழரசுக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

30 வருட போராட்டத்தின் பின்னர் வடமாகாணசபையில் அரசியல் குழப்பமொன்று ஏற்பட்டு அது சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.

நாடகத்தின் முதலாம் பாகம் நிறைவடைந்துவிட்டது. பல விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பின்னர் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் காலம் முடிவடைந்துவரும் நிலையில் இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.