unnamed (2)

அழுகை நின்று அமைதி நிலவும் அருந்தமிழ் ஈழம் அழகுற மலரும்

இடியும் புயலும்
இணைந்தே எழும்பும்
இனிய ஈழம்
இயல்பாய் மலரும்

முள்ளி அவலம்
முழுதும் விலகும்
மூடர் பேரினம்
முற்றிலும் அழியும்

ஓய்ந்திடா புலம்பல்
ஒப்பாரி விலகும்
ஒப்பற்ற எம்மினம்
ஓர்மை பெறுக்கும்

சிந்திய குருதி
செந்தணல் எரிக்கும்
சிகரமும் ஆங்கே
சிதைந்து தெறிக்கும்

வீரம் நிறைந்த
வேங்கை பாயும்
வீணர் மூச்சு
விறைந்து அடங்கும்

வன்புலி வான்புலி
வடிவாய் இறங்கும்
வண்டமிழ் இனமோ
வாழ்ந்து சிறக்கும்

பகையது தீர்த்தே
பரணிப் பாடும்
பைந்தமிழ் வீரம்
பரவிச் செழிக்கும்

செந்தமிழ்க் குடியே
சிங்களன் அழிக்கும்
செங்கொடி வானில்
சீறிப் பறக்கும்

விடியும் நாளை
வானம் புலரும்
விழிகள் திறக்க
வழிகள் பிறக்கும்

அழுகை நின்று
அமைதி நிலவும்
அருந்தமிழ் ஈழம்
அழகுற மலரும்

(www.eelamalar.com)