இங்கு வரிசையாக நிற்பது எதற்கு என்று தெரியுமா? படுகொலையாவதர்கும் சீரழிக்கப்படுவதற்கும்

இங்கு வரிசையாக நிற்கும் பெண்கள் இளையவர்கள்… வரிசை கட்டி நிற்பது எதற்கு என்று தெரியுமா? படுகொலையாவதர்கும் சீரழிக்கப்படுவதற்கும். மாபெரும் இனப்படுகொலையின் ஆவணங்கள் இது போல் பல்லாயிரம்.. ஆனாலும் இந்த உலகம் போர்க் குற்றம் என கூட சொல்ல தயங்கும் கொடுமையை என்ன சொல்வது. எங்கள் மண்ணில் நடந்தது அப்பட்டமான இனப்படுகொலை. அது மட்டுமல்ல மிகக் கொடூரமாக உலக விதிகளை மீறிய விதிமுறைகள் கடந்த கொடிய இனப்படுகொலை. இங்கு இராசாயன புகை போட்டு கொல்ல வரிசையில் எம் பெண் போராளிகள் நிற்க வைத்து கொல்லப்படும் கொடிய காட்சிகளின் ஆவணத்தை பாருங்கள். இதற்கு பிறகும் இரக்கமின்றி கேட்கிறார்களே.. ஆவணம் தாருங்கள் என்று… எங்கள் சகோதரிகளின் பிரித்து போட்ட அம்மண உடலங்களை வரிசையாக கிடத்தி பார்த்த பின்னும் நடந்தது இனப்படுகொலை என சொல்ல மறுக்கும் மனசாட்சிகளை என்ன என்று சொல்வது?

இனப்படுகொலையின் சாட்சியங்களாக தமது சாவு இருக்க வேண்டும் என தம் இந்த கொடிய மரணங்களை இழிவாக படுகொலை செய்த காட்டேரிகள் பிடியிலும் கலக்கம் இன்றி நிமிர்ந்து நிற்கும் எங்கள் போராளிகளின் நெஞ்சுரம் உலகில் எந்த மானிட உயிரும் கண்டிராதது. எங்கள் மண்ணில் நடந்தது இனப்படுகொலை என உலகம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே கழுத்தில் தொங்கிய நஞ்சு மாலைகளை கழற்றி வீசிய தேசத்தின் புதல்வர்கள் இவர்கள். வீர வணக்கம் எங்கள் உறங்காத கண்மணிகளுக்கு….

இப் பதிவு உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் எங்களை மன்னியுங்கள் நீங்கள் என்றும் எமக்கு நடந்த கொடுமையை மறக்காமல், மற்றும் எமது இலக்கின் பாதையில் இருந்து விலகாமல் இருக்கவே இப்பதிவு…. காலத்தின் கட்டாயம்..

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

ஈழவேந்தன்