இந்தநாள்…!!
27.07.1975

தமிழரின் தலைவிதியை மாற்றியமைக்கும் மகத்துவமொன்று தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கெளவரவத்தையும் காத்துநின்று தமிழினத்தை தலை நிமிரசெய்து தன்மானத்துடன் வாழவைப்பதே தன் வாழ்வின் இலட்சியமாக வரித்துக்கொண்டு அதற்கான தனது முதல் அடியை எடுத்துவைத்தநாள்.தனது கடமையை செய்ய தொடங்கியநாள்.தமிழர் வீரவரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டியநாள். பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.
தமிழன் புலியாகிய நாள்
எதிரி கிலியாகிய நாள்…

ஒம் அண்ணண் பிரபாகரனின் கைத்துப்பாக்கி தனது முதல்குண்டை துப்பியநாள்.

இளமை காலங்களின் கனவுகளை சுமந்து பட்டாம்பூச்சிபோல் சிறகடித்து பறந்து திரியவேண்டிய 21வயது இளைஞனொருவன் தமிழினத்திற்க்கு நிகழ்ந்த அநீதிகளையும்,அக்கிரமங்களையும்,அநியாயங்களையும்,கொடுமைகளையும் கண்டு கொதித்தெழுந்தான்.அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிகொடு என்பதை தாரக மந்திரமாக ஏற்று தனது கடமையைசெய்ய தொடங்குகின்றான்.அந்த இளைஞன் ஒரேயொரு துருப்பிடித்த பழைய ஓட்டை துப்பாக்கியை வைத்துக்கொண்டு எதிர்த்தது ஒருவரையோ,இருவரையோ அல்ல சகல வலிமையுடன் இருக்கும் பேரினவாத அரசாங்கத்தை.இந்த துணிச்சல் உலகிலையே ஒரே ஒருவனுக்குதான் சாத்தியம் அது வேலுப்பிள்ளையின் மகனுக்கு.

எதிரிகளைவிட துரோகிகளே மிக ஆபத்தானவர்கள் என்பதை அந்த இளம் வயதிலையே தீர்க்கமாக உணர்ந்த அந்த பயமறியா இளங்கன்று தனது முதல் தோட்டாவுக்கு பலியாக்கினதும் துரோகியைதான்.தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து சிறீலங்கா அரசாங்கத்தை கேள்வி கேட்காமல் எதிர்த்து பேசாமல் கண்டும் காணாமல் இருந்த அப்போதைய யாழ்பாணமேயர் ஆல்பர்ட் துரையப்பாதான் அண்ணண் பிரபாகரனின் முதல் குண்டுக்கு பலியான துரோகி.

இந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட எல்லோரும் எறக்குறைய அண்ணையை ஒத்த வயதுதானாம் எல்லோருக்கும் இதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததாம் செய்து முடிக்கும் வீரமும் துணிச்சலும் அண்ணண் பிரபாகரனுக்கு மட்டுமே இருந்தது.ஒர் அரசாங்க அதிகாரியை சுட்டுக்கொன்றால் எவ்வாறான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையெல்லாம் தீர்க்கமாக ஆராய்ந்து எதையும் சந்திக்க துணிந்து இவரது சாவு இனி தமிழர்களுக்கு தூரோகம் இழைக்க நினைப்பவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்றெண்ணி துப்பாக்கியை எடுத்தார் சரியாக குறிவைத்தார் சுட்டுவீழ்த்தினார்.

இந்த செயலுக்கு பின்னர்தான் பிரபாகரன் என்னும் பெயர் சிங்களத்திற்க்கு சிம்மசொப்பனமானது.அப்போதைய அரசாங்கம் நினைத்திருக்கலாம் ஒரே ஒருவன்தானே செய்தது எப்படியும் தேடி சுற்றிவளைத்து சுட்டு கொன்றுவிடலாம் என்று.ஆனால் அப்போது அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் பாதிப்புக்கு உள்ளான மக்களையே திரட்டி எந்த நாட்டு அனுசரனையும் இல்லாமல் தமிழ்மக்கள் என்ற ஒற்றை மூலதனத்தை மட்டுமே ஆதாரமாககொண்டு அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் முகம்கொடுத்து,தடைகளையும் சாவல்களையும் கடந்து,சுமைகளையும் சோதனைகளையும் தன்தோளில் சுமந்து தரைப்படை,கடற்படை,வான்படை,கரும்புலிப்படை என மரபுவழி இராணுவத்தை கட்டமைத்து.ஒரு அரசாங்கதிற்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் கட்டியமைத்து தனது ஆளுமையின் கீழ் நிழல் அரசாங்கத்தை நிறுவி தனது ஆளுகை பகுதிக்குள் நீதியும் நேர்மையுமாக பொற்கால ஆட்சிபுரிந்து. சிறீலங்கா மட்டுமல்லாது நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டதட்ட 32 உலகநாடுகளை எதிர்த்து நின்று தமிழன்டா என்று மார்தட்ட பிறந்த பிரபாகரன் இவனென்று.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
பிரபாசெழியன்.