இன்று பரவலாக உலா வருகின்ற படங்களில் ஒன்று இது…
இன்று பரவலாக உலா வருகின்ற படங்களில் ஒன்று இது… யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தாக்குதல்களை அடுத்து வரையப்பட்ட இவ் ஓவியத்தினை பலரும் நல்லிணக்கம்,காதல் என்கின்ற தலைப்புகளுடன் பகிரப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதில் உள்ள அரசியலுக்குள் புகமுன் காதல் என்பதும் நல்லிணக்கம் என்பதும் வெற்று இடுப்பில் கைவைத்து அணைப்பதும் உதடுகள் உரசிக்கொள்வதுமா என்கின்ற வினாவினை 2009 இற்கு பின்னர் முளைத்துள்ள திடீர் நல்லிணக்கவாதிகளிடமும் தலைப்புகளுடன் பகிர்கின்ற முகநூல் அட்டைக்கத்திகளிடமும் வைக்கவேண்டும். இது புறமிருக்க….
இதன் ஓவியரான சிங்கள சகோதரன் சொல்ல வருவது தான் என்ன? கலப்பு திருமணம் மூலமான இன அடையாளத்தினை தொலைத்தலா? அல்லது படத்தின் பின்புறத்தில் உள்ள இராணுவ சீருடை வர்ணத்தின் மூலம் சொல்ல வருகின்ற ஆக்கிரமித்தலா? இலங்கையில் நால்வகை இனம் இருக்கும் போது குறிப்பாக தமிழ்பெண்ணை சிங்களவன் அணைப்பதன் நோக்கம் என்ன?
இங்கே இலங்கை பௌத்த பேரினவாத அரசு தமிழ்பெண்கள் மேலான பாலியல் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தியிருப்பதை எம் தமிழின வரலாற்றின் பக்கங்களில் கோணேஸ்வரி, கிருஷாந்தி போன்றோரது இரத்தங்கள் எழுதிச்சென்றிருக்கும் போது இப்படத்தினை ஒன்றும் கலைக்கண்ணுடன் பார்க்க எந்த ஈழத்தவனும் ஈழத்தமிழச்சிகளும் தயாராகவிருக்கமாட்டார்கள். இதையும் அப்பேரினவாதியின் வாரிசு ஒன்றின் வக்கிர எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடக்க முடிகின்றது… அல்லது கண்டு கொதிக்க முடிகின்றது.
(பிற்குறிப்பு: ஓவியர் தமிழச்சியின் இடக்கையை மறைத்திருப்பதிலும் அல்லது மறந்திருப்பதிலும் ஒரு அர்த்தம் உண்டு. ஒருவேளை அக் கை குறுவாளின் பிடியை இறுக பிடித்திருக்க கூடும். நேரம் பார்த்து இடுப்பில் செருகுவதற்கு……)
(www.eelamalar.com)