இராவணனின் மரணத்திலும் மர்மம்! பிரபாகரனின் மரணத்திலும் மர்மம்!
அன்றும் இன்றும் நீடிக்கும் மர்ம மரணங்கள் தொடர்பில் தமிழனும் சிங்களவனும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றான். தமிழனின் உடல்கள் புராதான கால சம்பவமாக கருதப்படும் இராமயணத்தில் குறிப்பிடப்படும் தமிழ் மன்னன் இராவணனை அழித்து விட்டதாக கூறப்படுகின்றது. இது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவமாக இருந்தாலும், வட இந்தியர்களுக்கும், தென் பகுதியில் அமைந்திருக்க இலங்கை தீவிற்கும் இடையே உள்ள சம்பவமாக கருதப்பட்டு, இன்றுவரை பல ஆயிரக்கணக்கான வட இந்திய மாநிலங்களில் இருந்து இராமனின் மனைவியை கவர்ந்து வந்த இடமாக இலங்கையின் முழு பகுதியுமே அதற்கான ஆதாரங்களை குறிப்பிட்டு சரித்திரங்களில் புராதானக் கதைகளில் கூறப்படுகின்றது.
சீதையை அபகரித்த ராவணன்
அதில், இராவணனை அழித்த இராமன் வட இந்தியாவிற்கு மீண்டும் சென்றதாக கூறப்பட்டாலும், எமக்கு அப் பகுதிகளை காணும் சந்தர்ப்பங்கள் கிடைக்கவும் இல்லை. அதில் நாங்கள் ஆர்வமும் காட்டவில்லை இது இலங்கை தமிழர்களின் எண்ணமாகும். இராவணன் இந்து மதத்தை சார்ந்தவன், திறமையானவர் பற்பல ஆராச்சிகளின் மூலம் தொழிற்நுட்பம், வைத்தியம், நிர்வாகம், சமயம் என்று பல்வேறு துறைகளின் சிறந்த மன்னனாகவும் புஸ்பரக விமானத்தை இயக்கிய வீரனாகவும் இன்றுவரை கருதப்படுபவன்.
அதற்கு ஆதாரமாக இராவணா எல்ல சீதா எலியா. திருக்கோணமலையில் தனது தாயாரின் இறுதி சடங்குகளுக்காக கிண்ணியாவில் கிணறு அமைந்ததாகவும், சாட்சிகளுடன் ஆதாரங்களுடன் இன்றும் பல வேறு இடங்களை குறிப்பிடலாம். அப்படிப்பட்ட இராவணைனைத் இன்றும் இலங்கை வாழ் சிங்கள சமூகம் அவரை மறக்காது, அவரின் இறந்த உடல் இன்றும் இருப்பதாகவும், வேறு சிலர் அவர் மயக்க நிலையிலேயே இன்றும் எங்கோ அவரின் உடல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அந்த மா மன்னனின் உடலை தேடி சிங்கள இன மக்கள் இன்றுவரை அலையாக தேடி வருகின்றார்கள். இது கற்பனை கதையென நம்பும் பலருக்கு ஆச்சரியமான விடயமே. இராவணன் இருக்கின்றாரா? இல்லையா என்பது இன்று ஓர் மர்ம நிகழ்வாகவே இருக்கின்றது . இந்து மத தத்துவங்களின் படி பார்த்தாலும் ஏனைய சமயங்களின் அடிப்படையாக வைத்து பார்த்தாலும் சித்தர்களின் சூட்சம் உடல் இன்றும் யாவற்றையும் கண்கானிப்பதாகவே இருக்கின்றது. அகத்திய மாமுனிவர் முதல் போகர் சித்தர்வரை பல அமானுஸ்ய விடயங்களை நாம் கேள்விப்படுகின்றோம். இது விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்த படா விட்டாலும் சில சம்பவங்கள் நம்மை பிரமிக்க வைக்க கூடியதாகவே உள்ளது.
இவைகள் யாவும் கடந்தவை கற்பனை என்றாலும் இராவணனின் உடலை இன்றும் தேடும் சிங்கள மக்களின் நோக்கம் தான் என்ன? இது சற்று சிந்திக்க வேண்டிய விடயமே!
என்றோ எப்பொழுதோ நடந்ததாக யாரோ எழுதிய சம்பவங்களுக்கு ஆதார பூர்வமான இடங்களை இன்றும் இலங்கையில் பார்த்தாலும் நாமும் நம்பமுடியாத இராவணனின் உடல் மயக்க முற்று இருப்பதற்கு எந்தவிதமான ஆதாரங்கள் இல்லையென்பதே உணரலாம்.
ஆனால் அதை உறுதி படுத்த நம்மிடமும் ஆதாரம் இல்லையென்பதும் உண்மை. இந்த வழியிலேயே நமது காலத்தில் மரண மடைந்ததாக இறந்ததாக கூறப்படும் தலைவர் வே. பிரபாகரனும் இராவணனைப் போல் தனது ஆட்சிக்கு உற்பட்ட பகுதிகளில் திறமையான ஆட்சி தொழில் நுட்பம் நீதி போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தினார் என்பதை தமிழ் மக்களின் தீர்மானமாகும்.
அவரும் அப்பகுதிக்கு வேண்டிய சகல வளங்களை பயன்படுத்தக்கூடிய திட்டங்களுடன் தனது போர் முறையை ஆரம்பித்தார். ஆனால் நடந்தது என்ன? அன்று இராவணனை காட்டி கொடுக்க அல்லது இலங்கைக்குள் வர இராமனுக்கு பாலம் அமைத்தவர்கள் யார்? காட்டி கொடுத்த சிலரை அதே போலவே. தலைவர் பிரபாகரனையும் காட்டி கொடுக்க செயல்பட்டவர்கள் யார் என்பது சகலருக்கும் தெரியும். சிங்கள பொது மக்களை இலக்குவைத்த அழிக்க, போலி புலிகள் உருவாக்கிய சிங்கள மக்கள் தலைவர் பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் வெறுப்பை ஏற்படுத்த காரணமானவர்கள் யார்? இதுவும் சகலருக்கும் தெரிந்த விடயம்.
இருப்பினும் இராவணனின் உடலும் மறைக்கப்பட்டது போலவே பிரபாகரனின் மரணத்திலும் மர்மம் உள்ளது.
புராதான காலத்தில் இராவணன் என்ற அரசனின் உடல் எங்கோ மறைக்கப்பட்டிருக்குமாயின் அதற்கு பல ரகசிய அமானுஸ்ய மூலிகைகள் மூலம் இருக்கலாம். உதாரணமாக பிரமிட்டுக்களை குறிப்பிடலாம் அந்த பிரமிட்டுகளில் உள்ள உடல்கள் இன்றும் அழியாமல் இருப்பதற்கான ஆதாரங்கள் உண்டு. தலைவர் பிரபாகரனை பொருத்தவரை தமிழ் மக்களின் நம்பிக்கை அவர் எங்கோ இருக்கின்றார் என்பதாகும். இது உண்மைக்கு மாறாகவும், இருக்கலாம் அல்லது உண்மையாகவும் இருக்கலாம். எனினும் தமிழர்கள் பிரபாகரனின் உடலை தேடும் அதே நேரம் இராவணின் உடலை சிங்களவர்கள் இக்காலப்பகுதியில் தேடுகின்றார்கள்.
இரண்டிலும் ஏதோ ஒருவகை ஒற்றுமையை நாம் காண்கின்றோம். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது இரண்டு மரணங்களிலும் மர்மம் உள்ளது. இது வெளிச்சத்திற்கு வரும் வரை சிங்கள இனமும் தமிழர்களும் இரண்டு உடல்களை தேடுவது இன்று உண்மையாகவே உள்ளது. இராவணனும், பிரபாகரனும் உண்மையில் இறந்தது எப்படி என்ற உண்மை வெளிவரும் வரை சந்தேகமே.
(www.eelamalar.com)