மலர்ந்திடும் எங்கள் தாயகம்!!
களம் ஆடிய #சிறப்பு!
கனவு நிறைந்த #சிரிப்பு!!
தாய்மண் தந்த #வீரம்!
சேயெனக் காத்தநல் #அறம்!!
இலக்கு நோக்கிய #ஓர்மை!
இலட்சியம் நிறைந்த #பார்வை!!
நெறிமிகு போர் #மாராயம்!
வெறிமிகு விடுதலைப் #பேராவல்!!
நெஞ்சுரம் நிறைந்த #வீரர்!
அஞ்சிடா உயிராயுதத் #தீரர்!!
சூழ்ச்சி சுழன்ற #நஞ்சுக்குண்டு!
வீழ்ந்த மக்கள் #பிஞ்சுக்கூட்டம்!!
கருணா விரித்த #வஞ்சம்!
மறுக்குமா காடையர் #நெஞ்சம்!!
விழுந்ததுப் படையோர் #உடலம்!
எழுதுவோம் வரலாற்றுப் #படலம்!!
மறவோம் எம்மின #வீழ்ச்சி!
துறவோம் பேரினத் #தாழ்ச்சி!!
இறுதிச் சமரா #முடிவுற!
உறுதி மீள்வோம் #விடிவுற!!
அலறிடும் சிங்களப் #பேயகம்!
மலர்ந்திடும் எங்கள் #தாயகம்!!