இறுதித் தமிழ் தேசியவாதி விலைபோகவில்லை – சிறிதரன்

ஜிஎஸ்பி வரிச்சலுகை என்னவென்பது தெரியாமல் சட்டத்தரணி சுபாஸ் என்மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இறுதி தமிழ்த்தேசிய வாதியும் விலைபோய்விட்டார் என பரப்புரை செய்தார்கள். ஆனால் அது உண்மை அல்ல என்கிறார் சிறிதரன்.

வீ.வீ.சாந்தனின் உயர்தரத் தமிழ் நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் மருதங்கேணி பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்பி பிளஸ் சார்பாக ஓரு மண்படத்தில் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக இன்னொரு மண்டபத்தில் விளக்கம் நடந்துகொண்டிருந்தது. நான் அங்குதான் இருந்தேன். அதனை வைத்துக்கொண்டு நான் அரசோடு சேர்ந்து ஜிஎஸ்பி பிளஸ் சார்பாக வாதாடியதாக செய்தி வந்துள்ளது. அது தவறானது.

அங்கு நடைபெற்ற வாக்கெடுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்வகோளாறுகளால் நடைபெற்று தோல்வியில் முடிவடைந்தது. இடதுசாரி சிந்தனையுள்ளவர்களின் இப்படியான செயற்பாடுகளால் இத்தவறுகள் நடைபெறுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.