இறுதிவரை ஒருபுலி
உயிரோடு இருக்கும்வரை…
தமிழன்கை போராடும்..!

சோறு கிடைக்கும் இடத்தில் 
சுருண்டு படுப்பதற்கு 
நாயல்ல நாம்…
வீறு குலையாத 
தமிழன் பரம்பரையில் வந்த 
வீரத்தமிழர்கள்..தமிழ்
ஈழத்தமிழர்கள்…நாமடா..!

ஆறுபடையுடன் போரை நடாத்தியே
அந்நியச் சிங்களவன் கால்கள்..
தமிழ்மண்ணில்..
அடியெடுத்து 
வைத்தபோதெல்லாம்
கூறு ..கூறாய் வெட்டிச்சரித்த 
வீரப் பிரபாவின் 
தீரப்படையணி நாமடா..!

சேறு மிதிப்பது போலவர் 
குருதியில் குளித்து 
பலகாலம் தமிழரின் 
வீர வரலாற்றை..
எழுதிய வேங்கைகள் நாமடா..!

ஆறும்.. ஆறுமடா ..வன்னியில் 
விழுந்தநம் 
காயம் ஆறுமடா..!
தமிழ் 
புலியின் காயம் ஆறிட…
போரில் புதுநெறி வகுத்துநாம்
புறப்படும் போதிங்கே 
நரிகளின்…
வாலில் திரியினைக் கொழுத்திநாம்
விரட்டி அடிப்பது உறுதியடா…!

நாயென…நரியென 
வாழ்ந்திடும் வாழ்வொரு வாழ்வா..?
ஈழத்..
தாயெமை வீரப்பால் ஊட்டித்தான் 
வளர்த்தவள்…
என்பதை அறியாயோ..?

வாய்மையும் வீரமும் 
நம்முடன் கூடவே
வந்து பிறந்தவை..என்பதை 
அறியாத சிங்களவன் 
காயுடன் பிஞ்சினை..
பூவினை அழித்தது
கலங்கிநாம் அழுவதற்கல்ல..மீண்டும் 
துலங்கி நாம் எழுவதற்கு …
என்றறி தம்பி..!

இழந்தது அதிகம்தான்…
இழப்புக்களை கணக்குப் பார்க்க 
இதுநேரம் அல்ல..
மாற்றானிடம் அடிமைப்பட்டு 
காலமெல்லாம் மானத்தை இழப்பதைவிட…
நம்முடலின் குருதியை மீண்டும் 
பாத்திகட்டி இறைத்து
பயிர் வளர்ப்போம்.
“தமிழ் ஈழம்” என்னும்..
பயிர் வளர்ப்போம் …தளராதே தம்பி..

“வீரப் பிரபாவின் தீரப் படையணி நாமடா”

-மு.வே.யோகேஸ்வரன்