சிறுத்தைப் புலி நடமாட்டத்தால் அச்சத்தில் மக்கள்
டயகம வெஸ்ட் முதலாம் பிரிவு தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகமான சிறுத்தைப் புலிகள் நடமாடுவதால், மக்களின் மஇலங்கையில் இரவு நேரங்களில் புலிகளின் வேட்டையில் அச்சநிலை தோன்றியுள்ளது. குறிப்பாக இத் தோட்டத்தினை அண்மித்த பகுதியில் வனப் பகுதி காணப்படுவதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, அங்குள்ள கோழிகள், நாய்கள், பூனைகள் போன்றவற்றையும் சிறுத்தைககள் கொன்று விடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இரவு நேரங்களில் மக்கள் வெளியில் வருவதிலும் பல சிரமங்கள் இருப்பதாக மேலும் தெரியவருகின்றது. தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லும் போது சிறுவர்களை தனியாக வீட்டில் விட்டு செல்ல அஞ்சுவதாகவும் தாங்கள் வாழும் பகுதிக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும் கோரி மக்கள் டயகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே தமது நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.