இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் (22.10.17) பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

இன்றைய தினம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்ப்பாட்டால் பிரித்தானிய பிரதமர அலுவலகத்துக்கு முன்பாக பலகோரிக்கைகளை முன்வைத்து இலங்கையில் யுத்தம் முடிவடைந்தும் இன்னும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர்,

மற்றும் காணாமல் போனோர் பற்றிய விபரங்களையோ அல்லது அவர்களை கண்டுபிடித்து கொடுக்கும் முயற்ச்சியையோ இலங்கை அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை, அத்தோடு தமிழர் தாயாக நிலங்களை இன்னமும் விடுக்கவில்லை இப்படி இலங்கை அரசுக்கு எதிராக பலகுற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த கவனயீற்ப்பு போராட்டமானது பிரித்தானிய வாழ் தமிழ் மக்களால் இன்று (22.10.17) நாடாத்தப்பட்டது.

இக் கவனயீற்ப்பு போராட்டத்தில் அதிகளவு பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.