12189895_157819861238671_8965542317629929908_n

இலங்கை எல்லைக்குள் பிரவேசித்த மர்ம விமானம்

இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக கூறப்பட்ட அமெரிக்க விமானம் தொடர்பில் இலங்கை விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது.

சி. 37 பீ.எல்.எப். ரக கல்ப் ஸ்ட்ரீட் எனும் பெயரிலான அமெரிக்க விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

அமெரிக்க விமானம் இலங்கைக்கு வருகை தந்ததில் மர்மங்கள் எதுவும் இல்லையெனவும் அது சாதாரண விஜயம் எனவும் இலங்கை விமானப் படைப் பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமானம் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமானது என்பது உண்மையாகும். இலங்கைக்கு மேற்கொண்ட சாதாரண விஜயத்தின் போது திருகோணமலை சீனத் துறைமுகத்திலும் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பின்னர், இந்த அமெரிக்க விமானம் கட்டுநாயக்கவினூடாக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இப்படிச் சொல்லி இருந்தாலும் இலங்கை எல்லைக்குள் பிரவேசித்த மர்ம விமானம் புலிகளினதாகவும் இருக்கக்கூடும், புலிகள் வந்தது அவர்களது வேவு நடவடிக்கைக்காக இருக்லாம், இவர்கள் விமானம் மூலம் இலங்கை மேல் மர்மமான முறையில் பறப்பது இது முதல் தடவை அல்ல. மக்களே விழிப்பாய் இருங்கள் என்றும் சிங்கள நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.