ஈழத்தின் மகாராணி மதிவதனி அம்மையார் பற்றிய எவரும் அறியாத போராட்ட குணங்கள்!

ஈழத்தின் மகாராணி மதிவதனி அம்மையார் பற்றிய எவரும் அறியாத போராட்ட குணங்கள்!.

தேசத்தின் குரல் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து தன்னுடைய ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலில் குறிப்பிடும் போது, ”மதியைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்தது, தலைவர் பிரபாகரனுக்குக் கிட்டிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.
திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில், மிகவும் சோதனையான இடர் படிந்த காலங்களில்கூட நிலையான மற்றும் ஆழமான அன்பையும், இனிமையான குடும்ப வாழ்வையும் பிரபாகரனுக்கு மதி வழங்கியிருந்தார். எனினும், திருமண வாழ்வு என்பது மதிவதனிக்கு மலர்ப்படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி, எத்தனையோ தடவை மிகவும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தலைவர் பிரபாகரனின் போராட்டப் பணிகள் காரணமாக, இருவருக்கும் இடையில் நீண்டகாலப் பிரிவுகள் ஏற்பட்டதுண்டு. திருமணமான புதிதில் தனிமைத் துயரை அனுபவிக்கும் கொடுமைக்கு உள்ளானார் மதி. 

இந்திய இராணுவம் புலிகளுடன் பெரும் போரைத் தொடங்கிய காலத்தில் மதி இவ்விதமான துன்பங்களுக்கு ஆளானார். இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் தொடங்கியதும், நல்லூர் கந்தசாமி கோயிலில் தன் பிள்ளைகளுடன் அகதியாகத் தஞ்சமடைந்தவர்களுள் மதியும் ஒருவர். பின்னர் பிள்ளைகளை தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, முல்லைத்தீவின் அளம்பில் காடுகளுக்குள் களமாடிக் கொண்டிருந்த தன் காதல் கணவர் தலைவர் பிரபாகரனுடன் இணைந்தார்.
அளம்பில் முகாமின் மீது தொடர்ந்த ஷெல்லடிகள், பீரங்கித் தாக்குதல்கள், விமான குண்டு வீச்சுகளுக்கு மத்தியில், பிள்ளைகளைப் பிரிந்த ஓர் இளம் தாய், பிரிவுத் துயரிலும் கணவனோடு அந்தப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார். துன்பச் சூழலில் ஆறுதலாக இருந்த தன் தம்பி பாலச்சந்திரனையும் அந்தப் போரில் இழந்த மதி, குழந்தைகளோடு சுவீடனுக்குப் பயணமானார். முன்பின் அறிமுகமில்லாத கலாசாரம், இடையறாத ஆபத்து நிறைந்த போர்க்களத்தில் நிற்கும் கணவனைப் பிரிந்த சோகம், சென்ற நாட்டிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள இயலாத சூழலில் நேர்ந்த துன்பமான தனிமையுடன் தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்குமான பிரிவு முடிவுக்கு வந்தது.

பிரேமதாசாவுடன் 1989-ல் புலிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியபோது, மதி இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை பாலா (தேசத்தின் குரல் கலாநிதி அன்டன் பாலசிங்கம்) செய்தார். மதி கொழும்பு சென்றடைந்ததும், அங்கிருந்து அளம்பில் காடுகளுக்குச் செல்ல உலங்குவானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார் பிரேமதாசா. 1989-ல் மதி கணவரோடு சேர்ந்து கொண்டார். திருமணமான நாளில் இருந்து மதிக்கு நிரந்தரமான ஒரு வீடும் இல்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்வும் இல்லை. இருந்தபோதிலும், ஒரு கெரில்லாப் படைத் தளபதியின் மனைவிக்கு உரிய கண்ணியத்தோடும் துணிச்சலோடும் ஒரு நிலையான வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்! என விரிவாக சொல்லியிருக்கிறார்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு பிரபாகரனோடு சேர்ந்த மதி, இந்த இருபதாண்டுக் காலத்தில் பிரபாகரனை விட்டு எங்குமே விலகியதில்லை! புலிகளின் பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி, சில நிகழ்வுகளைக்கூட அவர் முன்னெடுத்திருக்கிறார். 1984 அக்டோபரில் திருப்போரூரில் மணமுடித்து, தங்கள் முதல் மகனைக் கருவுற்றபோது, ஜெயவர்த்தன அரசாங்கம் ‘ஓபரேஷன் லிபரேஷனை’ தொடங்கியிருந்தது.
சுற்றிவளைப்புகளுக்கு மத்தியிலும், பீரங்கி விமானத்தாக்குதலுக்கு மத்தியிலும் முதல் மகன் பிறந்த நேரத்தில் பிரபாகரன் தன் தளபதிகளோடு களத்தில் நின்றார். சில நாட்கள் கழித்தே மகனைத் தொட்டுப் பார்க்க முடிந்தது. அந்தப் பிள்ளைக்கு இலங்கை இராணுவ மோதலில் கொல்லப்பட்ட தன் தொடக்க கால நண்பனான சார்ள்ஸ் அன்டனி (சீலன்) யின் பெயரையே சூட்டினார்கள் இருவரும். 

அடுத்து பிறந்த பெண் குழந்தைக்கு வீரச்சாவடைந்த துவாரகாவின் பெயரை வைத்தார்கள். கடைசியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்த மகனுக்கு இந்திய இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்ட தன் தம்பி பாலச்சந்திரனின் பெயரை வைத்து அழகு பார்த்தார் மதிவதனி.
இந்த இருபதாண்டுகளில் போருக்கும் சமாதானத்துக்கும் இடையில் வதைபட நேர்ந்த வாழ்க்கை குறித்து மதிவதனி கவலைகள் எதுவும் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளதெல்லாம் ஒரே ஒரு வருத்தம்தான். இப்போதும் அவர் பிள்ளைகளைப் பிரிந்து இருக்கிறார். இன்று மதிவதனி தாய்லாந்தில் இருப்பதாகவும், கனடாவில் இருப்பதாகவும் சொல்லப்படும் சூழலில், இக்கட்டான எந்தச் சூழலிலும் அவர் பிரபாகரனைப் பிரிந்ததில்லை என்பதுதான் அந்தப் போராளிப் பெண்ணின் குணம்.

தலைவர் வே.பிரபாகரன் திருமணமான நாளில் இருந்து நிரந்தர வீடும் இல்லை….

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை என்று குறிப்பிடுவார்கள். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பெற்றோருக்குச் சொந்தமான வீட்டைத்தான் அனேகமானவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீடு என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு அடி நிலம்கூடக் கிடையாது என்பதுதான் உண்மை.

தலைவர் பிரபாகரன் அவர்களுடைய திருமணகாலம் முதல்கொண்டு அவர்களை நன்கு அறிந்தவர்களாக அன்டன் தேசத்தின் குரல் கலாநிதி பாலசிங்கம் குடும்பம் இருந்து வருகின்றார்கள். அடேல் பாலசிங்கம், தனது சுதந்திர வேட்கை நூலில், பிரபாகரன் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

மதியை (மதிவதனி அம்மையார்) பொறுத்தவரையில் திருமண வாழ்க்கை ஒன்றும் அவருக்கு மலர் படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி எத்தனையோ தடவைகளில் மிகவும் நெருக்கடியான துயர் சூழல்களை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி இருந்தது. பிரபாகரன் அவர்களது போராட்டப் பணிகள் காரணமாக தம்பதிகளுக்கு இடையில் நீண்ட காலப் பிரிவுகளும் ஏற்பட்டதுண்டு. திருமணமான நாளில் இருந்து மதிக்கு ஒரு நிரந்தர வீடும் இருந்ததில்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்க்கையும் கிடையாது. இருந்த போதிலும் ஒரு கெரில்லா படைத்தலைவரின் மனைவிக்குரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும், அவர் செயற்பட்டிருந்தார் என்று அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அகதி வாழ்க்கை….

இந்தியப் படை ஈழ மண்ணை ஆக்கிரமிக்க ஆரம்பித்த போது மற்றய தமிழ் அன்னையர் போலவே மதிவதனி அம்மையாரும் திடீர் அதிர்ச்சிக்கு உள்ளானார். இந்தியப் படையினர் தம்மால் முடிந்த அளவிற்கு அடாவடித்தனங்களை மேற்கொண்டபடி யாழ்பானத்தை முற்றுகைக்குள்ளாக்கிய போது பல பெண்கள், தய்மார் இந்தியப் படையின் கொடூரங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கோவில்களிலும், பாடசாலைகளிலும் அடைக்கலம் தேடிக்கொண்டார்கள்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான அகதிகள் அடைக்கலம் தேடியிருந்தார்கள். மதிவதனி அம்மையார் அவர்ளும், குழந்தைகளும் மக்களோடு மக்களாக நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அகதி வாழ்க்கை வாழவேண்டி ஏற்பட்டது.
தலைவர் பிரபாகரன் அவர்கள் போராட்டத்தை வன்னியில் இருந்து நெறிப்படுத்திக்கொண்டிருந்த போது அவரது மனைவி பிள்ளைகளோ மக்களுடன் மக்களாக இந்தியப் படையினரின் கொடூரங்களை அச்சத்துடன் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி என்று இந்தியப் படையினருக்கோ அல்லது தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கோ தெரிந்தால் அதோகதிதான். அவரை வைத்தே பிரபாகரன் அவர்களுக்கு வலை விரித்திருப்பார்கள். அவரைத் தொலைக்காட்சியில் காண்பித்து அசிங்கப்படுத்தியிருப்பார்கள். அவரது பிள்ளைகளைத் துன்புறுத்தி கொலை செய்திருப்பார்கள். அக்காலத்தில் அத்தனை அட்டூழியங்களை இந்தியப் படையினரும், அவர்களுடன் இணைந்திருந்த தமிழ் படை உறுப்பினர்களும் மேற்கொண்டிருந்தார்கள். அனாலும் தெய்வாதீனமாக அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அடைக்கலம் தேடியிருந்த பெரும்பாலானவர்களுக்கு மதிவதனி அம்மையார் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அனேகமானவர்கள் அச்சத்துடனும், பதட்டத்துடனும் அங்கு தவித்துக் கொண்டிருந்ததால், அருகில் இருப்பவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று விடுப்பு விசாரித்துக் கொள்ள நேரமில்லாமல் இருந்தது.

பரவிய வதந்தி….:

இப்படி இருக்கையில் இந்தியப் படையினரிடையேயும், தமிழ் இயக்க உறுப்பிர்களிடையேயும் ஒரு வதந்தி வேகமாகக் பரவ ஆரம்பித்தது. தலைவர் பிரபாகரன் அவர்கள் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மக்களுடன் மக்களாக மறைந்து தங்கி இருப்பதாக அந்த வதந்தி வேகமாகப் பரவியது.
பிரபாகரன் அவர்களின் துனைவியார் அங்கு மறைந்திருந்ததை அறிந்ததால் இந்த வதந்தி பரவ ஆரம்பித்திருந்ததா, அல்லது யாராவது வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை பரவ விட்டிருந்தார்களா என்று தெரியவில்லை.
நல்லூரும், கந்தசுவாமி கோயிலும் யாழ் உயர் சாதியினர் என்று கூறப்படுபவர்களின் ஒரு அடையாளமாகக் கருதப்பட்டதன் காரணமாக, இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழு உறுப்பினர்கள் இப்படி ஒரு கதையைக் கட்டிவிட்டிருக்கலாம் என்றும் அங்கு பேச்சடிபட்டது.

இந்த வதந்தி நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்திற்குள் தங்கியிருந்த மக்களிடையேயும் பரவ ஆரம்பித்தது. அடுத்து என்ன நடக்கும் என்கின்ற அச்சம் அங்கு தங்கியிருந்த மக்களிடையே பரவ ஆரம்பித்தது. மற்ற அகதி முகாம்களில் நடந்து கொண்டதைப் போன்று இந்த முகாமிலும் இந்தியப் படையினர் கொடூரமாக நடந்து கொள்ள ஆரம்பித்தால் என்னசெய்வது என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது. இந்தா இந்தியப் படையினர் வந்துவிட்டார்கள்.. அதோ அந்தப் பகுதியால் வந்துகொண்டிருக்கின்றார்கள்.. முகாமைக் குறிவைத்து விமானத்தாக்குதல்கள் நடைபெறப் போகின்றதாம். முகாமைக் குறிவைத்து யுத்த தாங்கிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றதாம்.. என்று பல வதந்திகள் அங்கு தங்கியிருந்த மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தன.
பலர் இரவோடு இரவாக முகாமைவிட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அவ்வாறு வெளியேறிவர்களுள் மதிவதனி அவர்களும் ஒருவர்.

காட்டு வாழ்க்கை….:

இந்தியப் படையினரின் நெருக்குதல் குடாநட்டில் அதிகமாக ஆரம்பித்தைத் தொடர்ந்து திருமதி மதிவதனி அம்மையார் அவர்கள் வன்னிக்குச் சென்று தங்கவேண்டி ஏற்பட்டது.
தனது பிள்ளைகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சிறிதுகாலம் தனியாகவும் பின்னர் பிள்ளைகளோடும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறுப் பகுதியில் உள்ள அலம்பில் காடுகளில் முகாம் வாழ்க்கை வாழ நேரிட்டது.
இந்தியப் படையினரின் செல் மழை இந்த காடுகளில் தொடர்ந்து பொழிந்த வண்ணமே இருந்தன. விமானக் குண்டு வீச்சுக்களும், இடையறாத முற்றுகைகளும் இந்த காடுகளில் இடம்பெற்ற வண்ணமே இருந்தன.
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமான ஆபத்துக்கள். பல்வேறு வடிவங்களில் ஆபத்துக்கள் அவர்களைச் சூழ்ந்த வண்ணமே… இருந்தன.

மீண்டும் வரலாறு திரும்பும்…
வரலாற்று பதிவில் இருந்து ஈழம் புகழ் மாறன்
Thanks & Regards,
Kalaiyarasan.K
E-mail : [email protected]
Mobile : +44-7520 636 338/ +1-785 679 0100