“ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன் ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்” 

ltte12-1-266x127கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கவிதையொன்றின் சில வரிகள் தான் மேலே உள்ளவை. நமது தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும், தலைவர் பிரபாகரன் அவர்களையும் ஆழமாக நேசித்த ஒரு உன்னதமான கவிஞர் வாலி.

ஈழத்தின் வீரத்தையும், காலத்தின் சதியினால் இன்று ஏற்பட்டுள்ள வந்த ஈழத்தின் சோகத்தையும் தனது கவிவரிகளின் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறிய கவிஞர் வாலி அவர்கள் விரைவில் சுதந்திர ஈழத்தின் வெற்றிச் செய்தியை தனது கவிவரிகளினால் அலங்கரிப்பார் என்று நினைத்த நிலையில் இன்று எம்மை எல்லோரையும் விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இருக்கிறானா?இல்லையா?’
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -பரம்பொருள்
ஆன பராபரன்;
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு –
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

என்று தேசிய தலைவர் அவர்கள் மீது தான் வைத்திருந்த ஆழமான பற்றினை வெளிப்படுத்திய கவிஞர் வாலி அவர்கள் இழப்பு என்று தமிழீழ மண்ணினால் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்று கருணாநிதி அவர்களினால் பார்வதி அம்மாள் அவர்கள் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கக்கூட அனுமதி அளிக்காமல் விமானத்தின் வைத்தே அவர்களை திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட போது ” விமானத்தின் இறக்கைகளும் அழுதன “என்று கவிதை மூலம் தனது சோகத்தினை துணிச்சலான முறையில் பதிவு செய்த வாலி அவர்களின் வரலாறு என்றுமே ஈழ மண்ணில் நிலைத்து இருக்கும்.

உடலால் மட்டுமே எம்மை பிரிந்து இருந்தாலும், உணர்வாலும், காலத்தால் அழியாத தனது பாடல்கள மூலமும் என்றுமே தமிழுடனும் தமிழர்களுடனும் இரண்டற காலத்து விட்ட கவிஞர் வாலி…

 

 

 

 

(www.eelamalar.com)