பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!
அன்று – உருவானது
தமிழர்களுக்கான புதிய வழி!!

தமிழரின்
விலங்கினை உடைத்து
உலகின் உச்சத்தில் வைத்த
உன்னதத் தலைவன்!

ஆசியாக் கண்டத்தின்
உச்சத்தில் உதித்த
ஈழத்துச் சூரியன்!
அச்சத்தில் மூழ்கிய
அப்பாவித் தமிழரின்
விலங்கினை உடைத்து
உலகின் உச்சத்தில் வைத்த
உன்னதத் தலைவன் இவன்!

பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்
தமிழனை சிங்களக் கொள்ளையன்
அடிமைப் படுத்தி ஆண்ட போது…
இலங்கைத் தலையின் மூளையில்
வல்வைத் தாயின்…
வீரத் திரு வயிற்றில்
உலகத் தமிழர்களின்…
ஒட்டு மொத்த மூளையாக
உயிராகி… உருவாகினான்..!

கார்கால மழையில் – ஓர்
கார்த்திகை நாளில்
இருட்டியது ஊர்…
இருபத்தி ஆறு நன்னாளில்
எடுத்தது வீரத்தாய்க்கு வலி!
பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!
அன்று – உருவானது
தமிழர்களுக்கான புதிய வழி!!