ஈழமென்னும் தேசம்
அதில் பெண்கள் எல்லாம்
புயல்கள்
ஆணுக்கு நிகராய்
களத்தில்
ஆயுதங்கள் தான்
தோளில்
அடிமை வாழ்வு
முடிக்க
ஆயுதங்களோடு
பயணம்
விழிகளில் நீரும்
மறைய
விடுதலை களத்தில்
உதயம்
பெண் இன்று
புலியாய்
புகழ் கொண்டு
நிமிர்ந்தாள்
ஈழமென்னும் தேசம்
அதில் பெண்கள் எல்லாம்
புயல்கள்
வீட்டுக்குள் முடங்கவில்லை
வீதியிலே ஆயுதத்தோடு
எழுந்து நின்றனர்
வரி புலியாகி
கரிகாலன் சேனையிலே
-சிவா TE