ஈழ தலைமகன்
எம் தேச விடியலின் நாயகன்

ஈழ தலைமகன்
எம் தேச விடியலின் நாயகன்
கார்த்திகை தந்த தமிழன்
ஈழம் போற்றிய புனிதன்

தமிழர் வரலாற்றில் தன்னிகர்
இல்லா தலைவனாய் எழுந்தான்
தாயாக விடிவுக்காய்
தன் தூக்கம் மறந்த
வீரன் இவன் அல்லவா

தரைப்படை கடல் படை
வான் படை கொண்டு நிமிர்ந்தான்
உலகம் வியந்திட்ட
மாவீரனாய் திகழ்ந்தான்
ஈழத்தின் கண்ணீர் துடைக்க
இமையமாய் எழுந்து வந்தான்
கால நதியில் கடவுளாய் நிமிர்ந்தான்
ஈழம் போற்றிடும் புலியாய் நடந்தான்

விடுதலை களம் கண்ட வீரன்
எல்லா மன்னனின் பேரன்
வல்லை மண்ணின் வரலாறிவன்
வரிப்புலி கண்ட முதல் புலி இவன்
தேசம் தியினில் எரியும் போது
புயலாக எழுந்த முதல் வேங்கை இவன்

-சிவா TE

(www.eelamalar.com)