லண்டனில் உணர்வெளிச்சியுடன் கொண்டாடப்பட்ட எழுச்சிநாள்
லண்டன் MILTON KEYNES பகுதியில் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் மற்றும் இம்மாதம் வீரச்சாவினை தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்காகவும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27.09.2015) நடைபெற்றது.
இதன் முதன் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ தேசிய கீதம் இசைக்கப்பட தமிழீழ தேசியக்கொடியினை மில்ரன். கின்ஸ் பகுதி பொறுப்பாளர் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினை சேர்ந்த மேஜர் மிகிந்தன் அவர்களின் தம்பி மயூரன் ஈகைச்சுடரினை ஏற்றி வைக்கப்பட்டது.
எம்மண்மீட்க, எம்மக்களுக்காக தமது இன்னுயிர்களை உகந்தளித்த உத்தம வீரர்கள் மாவீரர்களுக்கும் அப்பாவிகளாக கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவரும் மலரஞ்சலி செலுத்தி தீபமேற்றி மரியாதை செய்தனர்