உண்மை காதலின் உன்னதம்
அண்ணண் பிரபாகரன் பற்றி அவரது வீரம் திறமை தியாகம் அர்பணிப்பு ஆளுமைகளைப் பற்றி அதிகம் கதைக்கும் நாம் அதற்கு சற்றும் குறையாத அண்ணி மதிவதனியை பற்றி அவ்வளவாக கதைப்பதில்லை.பலஆயிரம் போராளிகளை வழிநடாத்தும் விடுதலை அமைப்பின் தலைவரின் மனைவி என்ற பெருமையோ கர்வமோ ஆணவமோ சிறிதும் இல்லாத கண்டால் கையெடுத்து கும்பிட தோன்றும் தோற்றமுடைய அண்ணியார் மதிவதினியின் தியாகமும் மகத்தானது.அளப்பரியது.
களமுனைகளில் ஆயுதம் ஏந்தி போராடவில்லையே தவிர அவரும் போராளியே.போராளி வாழ்க்கையைதான் அவரும் வாழ்ந்தார்.24 மணிதிலாயமும் பதட்டத்தில் இருக்கும் தேசத்தினுடைய தலைவரின் மனைவி.அண்ணையை திருமணம் முடித்த ஆரம்பகாலங்களில் அகதி வாழ்க்கையே வாழ்ந்தாராம்.அப்போது இவர்களுக்கென்று நிரந்தர வீடுகூட இருந்ததில்லையாம்.தலைவரின் மூத்தமகன் சால்ஸ் அன்ரனியை வயிற்றில் சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக அண்ணி அடைந்த துயரங்களை தேசத்தின் குரல் பாலா அங்கிளின் மனைவி அடேல் அண்ணி எழுதிய புத்தகத்தில் விரிவாக எழுதி உள்ளார்.முதல் குழந்தை சாள்ஸ் அன்ரனியை சிங்கள பிரதேசத்தில் உள்ள ஆஸ்பத்திரியில்தான் துணைக்கு யாருமே இன்றி பெற்றெடுத்தாராம்.இந்த துணிவு அண்ணணிண் துணிவை ஒத்தது.வேறு யாருக்கும் இந்த துணிச்சல் வராது.
தனது கணவனின் ஒவ்வொரு நகர்வுகளிலும் போராட்டத்திலும் தலைமறைவு வாழ்க்கையிலும் தொடர்ந்து அண்ணணுக்கு தோளோடு தோள்கொடுத்து நின்றவர் எங்கள் அண்ணி.இருவரும் உருவத்தால் வேறு வேறே தவிர உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத்தமிழினத்தின் விடிவிற்காகவே தங்கள் வாழ்க்கையையும் காதலையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள் இருவரும்.
மிக நெருக்கடியான காலகட்டங்களில் மிகக் கடுமையான சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் தருணங்களில்
அண்ணண் அண்ணியிடம் நீங்கள் வெளிநாட்டிற்க்கு போறியளா என்று சொன்னாலும் அண்ணி அதை திட்டவட்டமாக மறுத்து என்ன நடந்தாலும் உங்களோடுதான் இருப்பேன் வாழ்வோ சாவோ உங்களோடுதான் என்று உறுதியாக நின்று தன் காதல் கணவனையும் காதலித்து அவர்கொண்ட இலட்சியத்தையும் மிக உயர்வாக காதலித்த மங்கைதான் மதிவதினி அண்ணியார்.
அண்ணி நினைந்திருந்தால் வெளிநாடுகளுக்கு சென்று மிக உயர்வான ஆடம்பரமான பகட்டான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்.வசதி வாய்ப்புகளோடு இருந்திருக்கலாம் சொத்துகளை வாங்கி குவித்திருக்கலாம்.ஆனால் அண்ணி ஒருபோதும் அதை விரும்பியதேயில்லை.காடு மலை பசி பட்டினி இடப்பெயர்வு என்று தன் கணவணுக்காகவும் அவர்கொண்ட இலட்சியத்திற்காக மட்டுமே வாழ்ந்த வாழும் தமிழச்சி.அவர் அண்ணைமீது கொண்ட அன்பும் பாசமும் காதலும் அத்தனை ஆழமானது புனிதமானது உயர்வானது உன்னதமானது ஒப்பற்றது.
அண்ணியும் இயல்பாகவே போராட்டகுணம் உடையவர்தான் ஆரம்ப காலங்களில் சிங்கள பேரினவாத அரசை எதிர்த்து யாழ்பாண பல்கலை கழகத்தில் சாகும்வரை உண்ணாநோன்பை மேற்கொண்ட மாணவிகளில் அண்ணியும் ஒருவர்.இவரது போராட்ட குணம்தான் அண்ணையை இவரின்பால் ஈர்த்திருக்க வேணும்.ஒருவேளை அண்ணியின் காதல் கைகூடாமல் போயிருந்தால் நிச்சயமாக. ஆயுதம் தரித்த போராளியாகதான் களத்தில் நின்றிருப்பார்.ஏனென்டால் தாயக காதலையும் தலைவன் மீதான காதலையும் தனது இருகண்களாக பார்த்தவர்.அதற்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்தவர் எங்கள் தாயான அண்ணி.
காதலன் காதலி பெயர்களை கையில் பச்சைகுத்தி கொள்வதையும் பிளேட்டால் கையை வெட்டிக்கொண்டு இரத்தம் சொட்ட படமெடுத்து முகநூலில் போடுவதையும் உண்மைகாதல் என்று அழுது புலம்பும் சகோதர சகோதரிகளே உண்மை காதலின் உன்னதத்தை தெய்வீகத்தை எங்கள் அண்ணண் அண்ணியை பார்த்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.