உயர் தர மாணவர்களுக்கு ஜனவரியில் டெப் கணனிகள்!

13-11-2016-04புதிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி அரச பாடசாலைகளில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், அவ்வகுப்புக்களுக்குப் பாட போதனை நடாத்தும் ஆசிரியர்களுக்கும் Tab ரக கணனிகள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி மாதம் முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய  அரச பாடசாலைகளில் உயர் தரத்தில் கல்வி பயிலும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மாணவர்களுக்கும் 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் இந்த டெப் கணனிகள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பில் அவசியமான தகவல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

(www.eelamalar.com)