child

உலகை உலுப்பிய இரண்டு புகைப்படங்கள்! உங்களின் மனதைக் குழப்பியது எது?

இரண்டு சிறுவர்கள் இரண்டு வேறான சந்தர்ப்பங்களில் எடுத்த இருவேறான மரணம் மனதை உலுக்கும் புகைப்படங்கள் இவை.

11

முதலாவது 1945ல் அமெரிக்காவின் அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதலில் ஜப்பானே உருக்குலைந்து போன நேரத்தில் ஜப்பானில் எங்கோ ஒரு பகுதியில் தாய் தந்தையரெல்லாம் இறந்த நிலையில்,

தனது இறந்த தம்பியாரைப் புதைக்கக் கொண்டுபோன சிறுவன் தம்பியாரின் உடலைச் சுமந்தபடி அமைதி வணக்கத்திற்காக கம்பீரமாக தனது நாட்டை நேசிக்கின்றவனாக, போர் வெறியர்களிற்கு எதிரான பற்றாளனாக அமைதி மரியாதை செலுத்துகின்றான்.

அடுத்த படம் அமெரி;க்கா ஈராக்கியப் போரில் ஈடுபட்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போர் வீரர்களைக் களமுணையில் பலிகொடுத்து விட்டது. அவ்வாறு உயிர்விட்ட தனது தந்தையின் இறுதிச் சடங்கில் சம்பிரதாயங்களையெல்லாம் மீறி விம்மியழுகின்றான்.

12

இழப்பு என்பதற்கான அர்த்தம் அளப்பரியது. அது ஆத்மார்த்தமானது. நிறவேறுபாடற்றது. இங்கே இரண்டு போர்களின் இழப்புக்களிற்கான வலியை இளவயதில் பெற்ற சிறார். இப்படி எத்தனையோ தேசத்தில் எத்தனை சிறார்கள்.

images (11)

2009ல் இலங்கைத் தமிழர்களின் இதயத்தைச் சிதைத்து சிறார்களின் சிதைகளின் மீதேறி அராஜகம் புரிந்த “யுத்தத்திற்கு” மானிடத்தின் மறுபக்கம் தெரியாது. யதார்த்தைத் தேடாத எந்த மனிதனுமே இருப்பதும் இறப்பதும் ஒன்றே.

download (7)

எனவே இந்தப் படங்களில் எந்தப்படம் உங்களின் நெஞ்சை உலுப்புகின்றது என்பதற்கும் மேலாக 2009ல் ஈழத்தமிழ்க் குழந்தைகளின் இரத்தம் வரைந்த படத்தை “கலப்பு விசாரணை” என்ற அங்கீகரிக்கப்பட்ட பொறிமுறையை அடுத்த கட்டம் நகர்த்த வேண்டுமென்பதே இந்தப் படங்கள் சொல்கின்ற செய்தி.

(www.eelamalar.com)