12308438_1524948891163374_7081032512005249196_n

உலக வரலாற்றில் தடம்பதித்த புலிகளின் தலைவர் பிரபாகரன்

விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் 1954 கார்த்திகை மாதம் 26 தேதி வல்வெட்டித்துறையில் பிறந்தார் தந்தை பெயர் வேலுப்பிள்ளை தாயார் பார்வதி பிரபாகரனுக்கு ஒரு அண்ணனும் இரண்டு மூத்த சகோதரிகளும் உள்ளனர்.

பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தில் உயர் அதிகாரியாகப்பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பிரபாகரன் வல்வெட்டித்துறையில் உள்ள ஊரிக்காடு என்ற இடத்தில் உள்ள சிதம்பரா கல்லூரியில் 10-ம் வகுப்பு வரை பயின்றார். சிறுவயதிலேயே அப்பாவித் தமிழர்களை சிங்கப் போலீசா கொடுமைப்படுத்துவதை நேரில் கண்டார் அந்த காலக் கட்டத்தில் சில சிறுவர்கள் கொதிக்கும் தார்ப்பீப்பாய்க்குள் வீசி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால் சிறுவன் பிரபாகரன் உள்ளத்தில் தீ மூண்டது சிறுவனாக இருந்த போது பிரபாகரனும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து குண்டுகளை செய்யப் பழகினார்கள் ஒரு முறை பிரபாகரன் கைக்குண்டுகளை தயாரிக்கும் போது எதிபாராதவிதமாக குண்டு வெடித்து அவரது காலில் காயம் ஏற்பட்டது மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அக்கால் கருமையாக மாறியது அதனால் அவருக்கு “கரிகாலன்” என்ற புனைப்பெயரும் அமைந்தது.

10-ம் வகுப்பு படிக்கும் போதே போராளியாகி விட்டதால் அதற்கு மேல் படிப்பை தொடரவில்லை அவர் ரகசிய இயக்கத்தில் இருக்கின்றார் என்பதே அவருடைய பெற்றோருக்குத் தெரியாது ஒருநாள் நள்ளிரவு மூன்று மணிக்கு போலீசார் வந்து அவர் விட்டைச் சோதனையிட்டனர் அப்போது பிரபாகரன் வீட்டில் இல்லை பின்னர் பிரபாகரனின் தந்தை அவர் இருக்கும் இடத்தை தேடிக்கண்டு பிடித்து.

அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார் விட்டிற்க்கு வந்த பிரபாகரன் நான் ஒருபோதும் உங்களுக்கோ குடும்பத்திற்கோ பயன் பட மாட்டேன் என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம் என்னை என் போக்கில் விட்டு விடுங்கள் இனி எதற்கும் என்னை எதிர் பார்க்காதீர்கள் என்று கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அன்று முதல் காடுகளே அவர் இருப்பிடம் 1972 மத்தியில் தனது 17 வது வயதி “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தொடங்கினார் இந்த இயக்கத்தின் முதலாவது ராணுவ நடவடிக்கை 1975 ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண அமைப்பாளர் ஆல்பிரட் துறையப்பா சுட்டுக்கொல்லப்பட்டதாகும்.

புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் பெயர் 1976 மே மாதம் “தமிழீழ விடுதலைப் புலிகள் ” என்று மாற்றப்பட்டது இதன் தலமைப் பொறுப்புகளைப் பிரபாகரன் ஏற்றார். 1981ம் ஆண்டு ஜீன் மாதத்தில் யாழ்ப்பாண நகருக்கு ராணுவம் தீ வைத்தது. தெற்காசியவில் தலை சிறந்த நூல் நிலையமான யாழ் நூல் நிலையம் கொளுத்தப்பட்டதில் 94000 அரிய புத்தகங்கள் தமிழ் இலக்கியங்கள் எரிந்து சாம்பலாயின 1983 ஜீலையில் வெளிக்கடை சிறையில் குட்டிமணி உள்பட 37 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட சம்பவமும் 1985 ல் திரிகோணமலையிலும் வவுனியாவிலும் சிங்களப்படைகள் திடீர் தாக்குதல் நடத்தி 200 க்கு மேற்பட்ட தமிழர்களை கொலைசெயப்பட்மை போன்ற சம்பவங்கள் விடுதலைப்புலிகளின் ஆவேசத்தை அதிகமாக்கின அதன் பின் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பல் வேறு கட்டங்களில் நடந்த போர்களில் விடுதலைப்புலிகளின் கைதான் ஓங்கியிருக்கிறது.

ஈழத்தை மீட்பதற்கு 37 வருடங்கள் பல்லாயிரம் மாவீரர்கள் போராளிகள் போராடியும் இலட்சியத்தை அடைய முடியவில்லை. உடமைகள் சின்னங்கள் அழிக்கப்பட்டது ஆனால் உணர்வுகள் அழியவில்லை.

* காக்கை வன்னியன் பண்டார வன்னியனை காட்டிக்கொடுத்தான் அன்று
* பிரபாகரனை கருணாம்மான் காட்டிக்கொடுத்தான் இன்று.
இனத்திற்க்குள் துரோகிகள் இருக்கும் வரை ஈழத்தை மீட்ப்பது சாத்தியமா.???????i