எதிரியின் இதயபகுதியே தாக்குதல் இலக்கு…!

கடற்புலிகள்…!

தழிழ்மக்களின் இராணுவபலத்தை சிதறடித்து தமிழர் தாயகத்தை முழுமையாக தன்வசப்படுத்த எதிரி முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகள் எத்தனையோ விடுதலைப் புலிகள் வகுத்த எதிர் இராணுவ தந்திரோபாயங்களால் எத்தனையோ தோல்வி கண்டன.இவ்வாறான எதிர்நடவடிக்கைகளில் கடற்புலிகளின் பங்கு மகத்தானது அளப்பறியது.

1996 ஏப்ரலில் எதிரியின் சூரியகதிர் நடவடிக்கையின் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனமடைய செய்துவிட்டோமென எதிரி கொண்டட்டங்களை நடத்தி உலகளாவிய ரீதியில் பரப்புரை செய்துகொண்டிருந்த நாட்கள் அவை.எங்கள் நகரங்களை கைப்பற்றி உன்னால் எங்கள் மக்களுக்கு அழிவுகளை தரமுடியுமானால் உமது தலைநகருக்கும் எம்மால் தாக்குதல் நடத்தமுடியுமென பாடம் புகட்டிய கடற்கரும்புலிகள்…

ஏப்ரல் பன்னிரெண்டாம்நாள் இரவு பத்துமணியளவில் நீரடி நீச்சல் கரும்புலிகள் அணியினர் குறிக்கப்பட்ட இடத்தில் கடலில் இறக்கப்படுகின்றனர்.தமது இலக்கை நோக்கி நீந்த தொடங்கினர்.கடலின் சூழ்நிலை இவர்களுக்கு சாதகமாக அமையவில்லை அதிகாலை 4மணிக்கு போய் சேரவேண்டியவர்கள் காலை 6மணியாகியும் போய்சேரவில்லை.விடிந்து வெளிச்சமாகி விட்டகாரணத்தினால் எதிரியின் ரோந்து கலங்கள் இவர்களை கண்டுவிட்டது.உயிருடன் எதிரியின் கைகளில் சிக்கிவிடகூடாது என்ற இயக்கதின் கொள்கையை நெஞ்சில் நிறுத்தி குண்டுகளை வெடிக்கசெய்து வீரச்சாவை தழுவிகொள்கின்றனர்.

கொழும்புதுறைமுகக வாசல்வரை சென்ற நீரடி நீச்சல் கரும்புலிகள் நினைத்திருந்தால் மிக இலகுவான முறையில் வெளியே தரித்து நின்ற வணிக கப்பல்கள்மீதும் வெளிநாட்டு கப்பல்கள்மீதும் தாக்கியழித்திருக்கலாம் ஆனால் கரும்புலிகளின் நோக்கம் எங்கள் எதிரியின் கப்பல்களை தாக்கியழிப்பது மட்டுமே.புலிகள் தீவிரவாதிகள் என்றும் வன்முறையின்பால் நாட்டம் கொண்டவர்கள் என்றும் சிங்கள அரச ஊடகங்கள் பரப்பும் பொய் பிரச்சாரங்களை நம்புவோர் புலிகளின்இத்தகைய மனிதாபிமான நடவடிக்கைகளை கவனத்தில் எடுக்கவேண்டும்.அத்தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததையொட்டி தொடர்ந்து ரதீஸ் தலைமையிலான வல்லம் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைந்து கொழும்பு நகரையே அதிரவைத்து எதிரின் கப்பல் ஒன்றை முற்று முழுதாக அழித்து மற்ற இரண்டு கப்பல்களுக்கு பலத்த தேசத்தை உண்டாக்கி வீரகாவியமாகின்றது.
இத்தாக்குதலில்…
லெப் கேணல் ரதீஸ்
மேஜர் பொய்யாமொழி
மேஜர் ஜெனர்த்தனன்
மேஜர் தென்னமுதன்
மேஜர் வளநாடன்
மேஜர் ரதன்
கப்டன் சுபாஸ்
கப்படன் மதனி
கப்டன் விக்கி
ஆகிய கரும்புலிகள் இச்சமரில் வீரகாவியமாகினர்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
பிரபாசெழியன்.