எனக்கு ஆயுதம் வேண்டும்

இந்திய இராணுவம் நிலைகொண்டு இருந்த 1989 ஆம் ஆண்டு காலம் இயக்கச்சிப் பகுதியில் உள்ள கோவில் வயல் எனும் கிராமத்தில் ஒரு வீட்டில் செல்வராசா ,உபாலி என்ற இரு போராளிகள் வந்துபோகின்றார்கள் என்ற தகவல் இதற்காக பல முறை இந்த வீட்டை சோதனையிட்டனர் இந்திய இராணுவத்தினர் பலன் ஏதும் கிடைக்கவில்லை .ஒவ்வொரு முறையும் வீட்டுக்காரரைத் தாக்கி செல்வதை மரபாக்கி வைத்து இருந்தனர்.ஒரு சமயம் இரு நாட்களுக்கு மேலாக அந்த வீட்டில் மறைந்து இருந்தனர்.அப்பகுதியில் இருந்து எவரையும் வெளியேற விடாமல் காத்து இருந்தனர். இவர்கள் செய்யும் தவம் பற்றி போராளிகளுக்கு தகவல் தெரிந்தால் அவர்கள் அப்பகுதிக்கு அவர்கள் செல்லவில்லை.கலைத்துப் போய் முகாம் திரும்பியதும்.
மீண்டும் அந்த பகுதியில் போராளிகள் நடமாடுகிறார்கள் என்று தகவல் கிடைத்தது அவர்களுக்கு. அக்கிராமத்தையும் அருகில் உள்ள கிராமங்களையும் முற்றுகையிட்டனர்.முற்றுகையில் தப்பிப்பது கடினம் என்று தெரிந்து கொண்ட குறிப்பிட்ட இரு போராளிகள் இராணுத்திற்கு வழிகாட்டியாக வந்த இளைஞனது வீட்டில் போய் தங்கி இருந்தனர்.அதை விட பாதுகாப்பான இடம் கிடைக்காதல்லவா ?

முற்றுகையின் போது மக்கள் தரம் பிரிக்கப்பட்டனர் ஆதரவு வழங்குபவர்கள் .சாப்பாடு கொடுப்பவர்கள்.புலிகளுடன் பேசுபவர்கள். புலியை பார்ப்பவர்கள். என பல பிரிவுகளாக பிரிக்கபட்டதும்.வழமையான உபசரிப்புகள் நடைபெற்றனர் .இறுதியில் குறிப்பிட்ட வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றை பிரிகேடியரிடம் காட்டி விளக்கியவாறே கருப்பசாமி என்ற மேஜர் உரை நிகழ்த்தினார்.இந்திய இராணுவத்திற்கே உரித்தான வழமையான பிரசுரிக்க முடியாத வார்த்தைகளுடன் மேலும் சில வார்த்தைகள் வந்தன.

இரண்டு பேர் வாறாங்கள் இவங்கள ஊருல இருக்கின்ற இத்தனை ஆம்பளைகளாலையும் பிடிக்க முடியவில்லையா? நீங்கள் எல்லோரும் பொட்ட பசங்க.உங்களுக்கு எல்லாம் மீசை எதுக்குடா?எல்லோரும் போய் சேலை கட்டுங்கடா என்று திட்டினார்.தொடர்ந்து இந்த ஊருக்கு வர்ற செல்வராசா ,உப்பாலி இரண்டு பேரையும் புடிக்க என்ன என்ன வேண்டும் கேளுங்க துப்பாக்கி வேணுமா? அது வேணும் என்றாலும் தர்றம். யாராவது மீசை முளைச்ச ஆம்பளையா இருந்தா துப்பாக்கி வேணுமேங்கற ஆம்பளைகள் எழம்புங்க என்று ஒரு ஊக்குவிப்பு அறிவிப்பு அறிவித்தார்.

மேஜர் கருப்பசாமியின் வார்த்தையைத் தொடர்ந்து மவுனம் ஒருவரும் எழுப்பவில்லை.சிலர் இந்திய இராணுவத்தைதான் கருப்பசாமி பேசுகின்றனர் என்று பேசாமல் இருந்து விட்டனர்.
எல்லோரும் தலையை திருப்பி திருப்பி யாராவது எழுப்புகின்றனரா என்று பார்த்துக்கொண்டு இருந்தனர். இறுதியாக ஒருவர் எழும்பினார் சண்டிக்கட்டை கூட அவர் அவிழ்த்து விடவில்லை.அவர் யாரும் இல்லை அடிக்கடி முற்றுகைக்குள்ளாகும் அந்த வீட்டிற்குச் சொந்தக்காரர்தான் .கிராமத்தவர் அனைவருக்குமே வியப்பு .பிரிகேடியர் முகத்தில் புன்சிரிப்பு.

கருப்பசாமிக்கோ மகிழ்ச்சி தாளவில்லை இன்னும் உஷாராக பேச தொடங்கினார்.பாருங்கோ இந்த வயசுல இந்த ஐய்யா துணிந்து ஆயுதம் கேக்கின்றாரு. நீங்கள் எல்லாம் பெட்ட மாதிரி இருக்குறீர்கள்.இப்படி ஒரு வீரன் உங்கள் மத்தியில் இருப்பதற்காக நீங்கள் பெருமைபட வேண்டும் .என்று கூறி.அவரை நோக்கி ஐய்யா உங்களுக்கு எத்தன வயசு ?என்றார் அவர். அம்பத்திரண்டு என்றார். சரி ஐய்யா நீங்கள் ஏன் ஆயுதம் கேக்குறீங்க?அத இவங்களுக்கு சொல்லுங்கோ என்றார் கருப்பசாமி .ஐய்யா ஒரு கணமும் தாமதிக்கவில்லை. பதில் சொன்னார் உன்னோட இருக்கிறத விட நீ தாற துப்பாக்கியால் என்னை நானே சுட்டுச் செத்துப் போகலாம் அதுக்குத் தான் துப்பாக்கி கேக்கிறன்.

நன்றி : கேதன் கேதன்

1992 ஆண்டு பத்திரிகை பதிவு.