என்மீது போர்க்குற்றச்சாட்டு வழக்கினைத் தொடரமுடியாது – ஜெகத் ஜெயசூரிய!

தன்மீது போர்க்குற்றச்சாட்டு வழக்கினைத் தொடரமுடியாது என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தென்னமெரிக்க நாடுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில், யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அந்த யுத்தத்துக்குத் தானே தலைமைதாங்கி யுத்தத்தை வழிநடத்தியதாக பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா பகிரங்கமாகக் கூறி வருகின்றார்.

இந்நிலையில், எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு எந்த விதமான அடிப்படை காரணங்களும் இல்லை.

தற்போது எழுந்துள்ள நிலமை தொடர்பாக நான் தற்போதைய இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்குத் தெரிவித்துள்ளபோதிலும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக என்னால் எதுவும்செய்யமுடியாது. அரசாங்கம் தான் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.