சமாதான காலத்தில்…

தலைவரைப் பாத்து சில கேள்விகள் கேட்கணுமென்டுதான் வன்னிக்கு போனேன். இவ்வளவு பிரச்சினை ஏன்?
இவ்வளவு அழிவுகள் ஏன்? சனத்துக்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? இவ்வளவு பிரச்சினைகள் ஆரால எல்லாம் உங்களால் தானே என்டெல்லாம் கேக்கணும் எண்டு நினைத்து தான் வன்னி போனேன்

ஆனால் அங்க போய் அவங்க கட்டி வைத்திருக்கும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தை கண்டவுடனே என்னையும் அறியாத ஒரு மாற்றம் என்ட மனக் கசடுகளெல்லாம் கழுவப்பட்டு புதிதா பிறந்தது போல் உணர்வு எனக்குள்.

பிரபாகரன் ஒரு அதிசய பிறவியப்பா என்ன வசீகரமெண்டே விளங்கல்ல நேரா சந்திச்சீங்களென்டா அப்படி யொரு குழந்தைதனம் அவரிடம் இருக்கும். குறும்புதனம், குழந்தை தனம்,இயல்பான நகைச்சுவை, தன்னை பற்றின சுய பிரக்ஞையே இல்லாத எளிமை, தெளிவு, தீர்க்கம் ,உறுதி இவை யாவும் அமையப் பெற்ற குழந்தை தான் பிரபாகரன். அவருடன் நேரா கதைக்கும் போது அப்படியொரு பாசமும் உரிமையும் வந்திடுது.

வன்னியிலிருந்து திரும்பி வந்து நிகழ்ச்சி தயாரிக்கும்போது
“என் தெய்வம் வாழும் திருக்கோவிலில் நிண்டேன்”
என்றுதான் தலைப்பிட்டேன்.
BBC ஆனந்தி.

சிங்கள பேரினவாதம் அனாதை களாக்கிய தமிழ் பிஞ்சுகள் சிறார் யாவருக்கும் தானே தாயும், தகப்பனும், தெய்வமுமாகி அண்ணையின்ர நேரடி பார்வையிலும் பராமரிப்பிலும் உருவாக்கப் பட்டு பேணிய இல்லம் தான் செஞ்சோலை.

சதிகள், துரோகங்கள், இடர்கள், மனக் குழப்பங்கள் என்று தலைவரின் மனது சுமைபட்ட பொழுதுகளிலெல்லாம் தாய்மடி தேடி தஞ்சம் நாடியது இந்த செஞ்சோலை மொட்டுகளிடம்தான்.

“அங்கு போனால் மனம் அமைதி யாயிருக்கும் நிம்மதி கிடைக்கும்,மன இறுக்கம் விலகும்” என்று கூறுவார்.

இறுக்கமான போர்முனைகளில் நின்ற தருணங்களில் கூட ஒரு கிழமை செஞ்சோலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை என்றால் முன்னதாகவே தனிபட்ட முறையில் அப் பிள்ளை களுக்கு இனிப்புகள் பரிசுகள் அனுப்பி வைப்பார்.தமிழீழத்தின் ஒவ்வொரு குழந்தையும் தான் பெற்ற பிள்ளையை போல் பேணிய அந்த தாயுமானவர்.

தமிழரின்தா கம்த மிழீழ தாயகம்
-பிரபாசெழியன்