எப்போ நீ வருவாய்

தீயாகி நம்
தேசம் எரிகின்றது
தெருவெல்லாம் 
ஓலங்கள் கேட்க்கின்றது,

வந்த பகை நம்மினத்தை
கொன்றொழிக்க
செந்தமிழும் சங்கமம்
ஆகின்றது தீயினில் ”

பிணங்ளின் வாசனை
நம்மை விட்டு போகவில்லை
விடியல் பிறக்கும் என்று
விடியும் வரை நினைக்கின்றோம் ‘

நீ வருவாய் என
நாம் துடிக்கின்றோம்
வரும் நாளை எண்ணியே
தவிக்கின்றோம் ”

கார்த்திகையும்
பிறந்திடிச்சு
கரிகாலன் உன் பேச்சு
கேட்டிட மனசு தவிக்கின்றது ”

ஈழவன் தாசன்