“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது!”

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகி திலீபனின் தியாகம் ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகம். போராட்ட வராற்றில் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் போராட்ட சக்கரம் சூழன்று செல்வதற்கு அச்சாணியாக இருந்தது மட்டுமல்ல ஒவ்வொரு புதிய சூழற்சிக்கு உதாரண புருசராக இருந்தார்.

தியாகி திலீபன் இந்திய அரசாங்கத்திடம் நீதி கேட்டு சாகும் வரையான உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அதே இந்தியாவிடம் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் 1986 நவம்பர் நடுப்பகுதியில் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் என்பது வரற்றில் ஒரு பக்கம்.

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் நீர் கூட அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டது போலவே தியாகி திலீபனும் மேற்கொண்டார்.

உண்ணாவிரத்திற்கு முன்பாக தியாகி திலீபன் ஆற்றி உரையில் ”“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை யாரும் உறுதிப்படுத்த முடியாது!” என ஆணித்தரமாக கூறினார். இது தான் உண்மையாக செய்தி  இன்று எமது மண்ணில் எமது இராணுவம் இல்லை. எமது மண் ஆக்கிரமிப்பாளர்களால் மிகத் துல்லியமாக திட்டமிட்டு
அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

எமது நாட்டில் எமது இராணுவம் இல்லாமையால்

1) பாலியல் வல்லுறவுகள்
2 )சிறுவர் துஸ்பிரயோகங்கள்
3) போதைப்பொருள் பாவனைகள்
4) கொள்ளைகள்/ களவுகள்
5) கொலைகள்
6 )ஏமாற்றுவேலைகள்
7)மோடிகள்
8) வாள்வெட்டுக்கள்
9 )இலஞ்சம்
10) சமூக புறழ்வுகள்

என இன்னொர் அன்ன சமூக சிரழிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.சிறிலங்கா அரசாங்கத்தின் இனத்துவேசம் மட்டுமல்ல தமிழ் அரசியல் வாதிகள் பலரின் சுய நலம் மக்கள் நலத்தை விழுங்கி விடுகின்றது. எனவே, தியாகி திலீபனின் தீர்க்கதரிசனமான வார்த்தை ”“எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது!” என்பதே நிதர்சனம்.