எமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. !!

eelamகாலம் ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு வரலாறுகளை எம் இனத்திற்கு கொடுத்திருக்கிறது. தோற்று விட்டோம் என துவழாமல் விழுந்த இடத்தில் இருந்து அக்கினி சிறகாக மீண்டும் எழுவோம். முள்ளிவாய்க்கால் முடிவினை தரவில்லை எமக்கு விழுந்தால் மீண்டும் எப்படி எழ வேண்டும் என்ற படிப்பினையை தந்திருக்கிறது. லட்சக்கணக்கான உயிர்களை மண்ணில் விதைத்துள்ளோம். ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விடுதலை வீரனின் வரலாற்றை சுமந்து நிற்கிறது. மீண்டும் புலிகள் வருவார்கள் என காத்திருப்பது தவறு முதலில் நாம் தான் புலிகள் என உணர வேண்டும். புலிகளே மக்கள், மக்களே புலிகள் இதுவே வரலாறு.

அவர்கள் வேறு நாம் வேறாக வாழ்ந்திட வில்லை அவர்களோடு தான் நாம் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம் நம் அனைவரின் வீட்டில் இருந்தும் ஒரு மாவீரனையும் போராளியையும் கொடுத்திருக்கிறோம் அப்படி இருக்க நம்மோடு வாழ்ந்த புலிகள் நமக்கும் அதே உணர்வினை விட்டு சென்றுள்ளனர். வரலாற்றில் பல விடுதலை போராட்டங்கள் நடைபெற்றன இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவை வென்றும் இருக்கிறது பல தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாம் ஒரு நேர்மையான போராட்டத்தில் தோல்வியினை பெற வில்லை. ஒரு துரோக வரலாற்றின் முதுகிலே குத்தப்பட்ட நிலையிலேடயே வீழ்ந்தோம். நேர்மையான போராட்ட வரலாற்றில் இதுவரை தாம் விழ வில்லை அதை பல வரலாறுகள் அறியும். தோல்வியை சகிக்காத சிங்களமும், பயத்தினை தாங்காத உலக வல்லாதிக்க நாடுகளும், சிங்கள கைக்கூலிகளான இந்திய அரசும் எம்மை நேராக நெஞ்சிலே குத்த முடியாமல் முதுகிலே குத்தி வெற்றி வரலாறு படைத்ததாக சாயம் பூசிக்கொள்கிறது.

இதுவரை எத்தனை மாவீர வரலாறுகளை கொண்ட இனம் என்ற நிலையில் இருந்து சற்று விலகி யோசித்து பார்த்தால் 2009ல் மரணித்த பொது மக்களும் ஒரு வகையில் மாவீரர்கள் தான். தங்கள் சொந்த நிலத்தையும் சுய நிர்ணயத்தையும் விட்டு வெளியேற முடியாத நிலையில் வருவது வரட்டும் என களத்தினில் நின்று மடிந்து போனார்களே அவர்களை என்ன சொல்வது. அவர்கள் தாமே மரணத்தை தேடவில்லை அவர்கள் நன்றி மறக்காமல் தங்களை பணயம் வைத்தார்கள். முள்ளிவாய்க்கால் முடிவானது உலக நாட்டிற்கும், சிங்களத்து வங்குரோத்துகளுக்குமே தவிர எமக்கல்ல. இன்று நாட்டப்பட்டிருக்கும் கல்லறைகள் நமக்கான செய்திகளை கூறும் எரிந்த சாம்பல் மீண்டும் உயிர் பெறும் இது திண்ணம்.

இன்று போராட்டங்கள் ஓய்ந்த நிலையில் தலைவரின் இருப்பை அறியாத நிலையில் நாம் திரிபு படுத்தப்படும் நிலையிலும் இருக்கிறோம். காரணம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக வெளிச்சாயம் பூசப்படும் சிலரால் மறைமுகமாக சிங்கள ஆதரவோடு எமை தாக்கும் நிலையில் தடுமாறுகின்ற நிலையில் காணப்படுகின்றோம். தலைவர் பிரபாகரன் அனாதை பிணமாக்கப்பட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் என்றும் சில இணையங்கள் செயற்படுவதும் இன்று வேதனையை தருகிறது. தாங்கள் தான் புலிகள் என்றும் தாங்கள் எல்லாம் அறிவர் என்றும் பீத்திக்கொண்டு தங்கள் வியாபார நடவடிக்கையை தொடர்கின்றனர். ஈழப்போராட்டத்தில் உண்ணிப்பான கவனம் தேவை அதிலும் முள்ளிவாய்க்கால் இறுதி நிமிடங்கள் களத்தில் இறுதி வரை நின்றவனுக்கே புரியும் வெளியே இருந்து கொண்டு பேசுவதால் எந்த பொய்யும் உண்மையாக போவதில்லை.

“சுட்டு விட்ட பூமி இது மீண்டும் மீண்டும் கருத்தரிக்கும் எம் போராட்டம். எவன் வந்து தடை இடினும் நேரான பாதையில் மீண்டும் களம் புகுவோம் விரைவில்”

நன்றி
பவித்ரா நந்தகுமார்

(www.eelamalar.com)