எம்மை தொட்டவனை நாம் விட்டதில்லை…
எம் தேச விடுதலைக்காய்
எம் சிறகுகளை விரித்து பறப்போம்
விழிகளில் நீர் கண்டும்
மாற்றான் காலில் மண்டியிடவில்லை
எழுந்தோம் எதிர்த்தோம்
எம்மை தொட்டவனை நாம் விட்டதில்லை
திருப்பி அடித்தோம்
விலங்குகள் உடைத்தோம்
சிறை கதவுகள் தகர்தெறிந்தோம்
இழப்புகளை கண்டு எம்
கால்கள் சோர்ந்தும் இல்லை
இருளதை கண்டு நாம் அஞ்சியதுமில்லை
வேங்கையாய் தலைவன் நிமிர்ந்தான்
வேதனைகள் போக்கவே நடந்தான்
தலைவனின் பிறப்பு தமிழினத்தின் சிறப்பு
குண்டுகள் பொலிந்தவனை நாம்
கொன்றே புதைத்தோம்
துரோக வாள் கொண்டு எதிரி எம்மை
அழிக்க நினைத்தான் இன்னும் பணிவதா ?தமிழா .
எதிரிக்கு நாம் யாரென்று உணர்த்துவோம்
எழுவோம் நாம் எரிமலையாய்
பொங்கும் அந்த கடலலை போலவே
– சிவா TE