1011210

கரிகாலனிருக்க கவலை எதற்க்கு

தலைவர் எங்கே
தலைவர் எங்கே
தலைவர் எங்கு இருக்கின்றாய்
இருகின்றாரா இல்லையா
எப்போழுது வருவார்
எப்படி வருவார்
வருவாரா மாட்டாரா
ஒட்டுமொத்த தமிழ்மக்களின் மனங்களிலும் எழும் கேள்வியிது
ஏன் தேடுகின்றாய் தலைவரை எதற்காக தேடுகின்றாய் தலைவரை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒட்டுமொத்த தமிழினத்தின் பாரசிலுவையை அவர் தலையில் ஏற்றி வைத்துவிட்டு நீ ஓதுங்கி நின்று வேடிக்கை பார்க்கப்போகின்றாய்…

முப்பதாண்டு காலத்திற்க்கு மேலாக தன்னையும் மனைவி பிள்ளைகளையும் விடுதலைக் களத்தில் முன்னிறுத்தி தன் எண்ணம், ஆற்றல்,அறிவு,அன்பு,உணர்வுகள், கனவு,இலட்சியம்,ஆசை என எல்லாற்றையுமே தமீழிழ கனவுக்காய் தந்து தனக்கென எதையுமே சேர்த்துக்கொள்ளாத அந்த சரித்திர நாயகன்தான் இன்னமும் எங்கள் பாரத்தை சுமக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்.தலைவர் வரும்வரை காத்திருப்போம் என்பது அம் மாமனிதனுக்கு நாம் இழைக்கும் அநீதியில்லையா,இவ்வளவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் மூர்க்கமாக செயல்பட வேண்டாமா…

புலிகளை அழித்தொழித்துவிட்டோம் என்ற பேரினவாத சிங்கள அரசும் அதை கைகட்டி வேடிக்கை பார்த்த சர்வதேசமும போர் ஓய்ந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் உனக்கான எந்த தீர்வு திட்டத்தை முன்வைத்தது.உன்னிடம் இப்போ என்ன எஞ்சியிருக்கின்றது
புலிகள் உலாவிய புண்ணிய பூமியில் சிங்கக் கொடிகளும் சித்தார்த்தன் சிலைகளும் இதைகண்டும உன் உள்ளம் குமுறவில்லையா இன்னும் அமைதியாய் இருக்க நீயென்ன மனிதனா அல்லது மரக்கட்டையா…

தூரோகத்தாலும் ஒற்றுமையின்மையாலும் இப்படி உருக்குழைந்து கிடக்கின்றாயே கேட்க நாதியின்றி.நமக்கான இலக்கு என்ன என்பதை நம் தலைவன் தெளிவாக சொல்லியிருக்கின்றான்.அதை அடைய வேண்டிய பாதையையும் அவன் அழகாய் காட்டியிருக்கின்றான்.நெருப்பு வழி பயணிக்க தீர்மாணித்த பிறகு புகையை கண்டஞ்சாதே இழந்ததை மீட்போம் இருப்பதை காப்போம் என்ற முழக்கத்தோடு விழி எழு புறப்படு புரட்சிசெய் நீ நெஞ்சை நிமிர்த்தி எழுந்து நடந்தால் இமயம் உன் உயரம் காண ஏணிகேட்டு நாணிக்குனியும்.

முல்லைத்தீவிலிருந்து மொரீசியஸ் தீவு வரை

விசுவமடுவிலிருந்து விம்பிள்டன் வரை

நீர்வேலியிலிருந்து நீயூயார்க் வரை

எங்கெல்லாம் தமிழன் வாழ்கின்றானோ அங்ககெல்லாம் இருந்தபடி ஓரணியில் ஓற்றுமையுடன் அன்னை தமிழ் ஈழத்திற்காக அர்பணித்து போராடு.”தமிழ் மக்கள் அனைவரும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்குகொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றிபெருவது நிச்சயம்” என்ற எம் பெருந்லைவனின் சிந்தனையை செயலாக்கு.உன்னை இருகரம் கூப்பி கட்டி தழுவி வரவேற்று ஆசிர்வதித்து வழிநடாத்த நலமாய் இருக்கின்றான் எம் தேசப்பெருந்தலைவன் எம் அண்ணண் தமிழீழ மாமன்னன்.

கரிகாலனிருக்க கவலை எதற்க்கு

விழிழ்துக்கொள்
எழுச்சிகொள்
புறப்படு
புரட்சிசெய்
பயிற்ச்சி செய்
தடையுடை
இலக்கையடை

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

-பிரபாசெழியன்.