48

காணாமல் போன எம் உறவுகள் பற்றி தகவல் எல்லோரும் இல்லை ஒரு சில உறவுகளின் நிலமை ……!

மோட்டு சிங்களவன் மோட்டு சிங்களவன் என்று சிங்களவனின் பார்த்து சொல்லி நாம் தான் மூலை இல்லாத முட்டாள்கள் போல் உள்ளோம். ஈழ மண்ணில் எமது போராளிகளையும் தளபதிகளையும் மக்களையும் படுகொலை செய்து கொலைவெறி ஆட்டத்தை ஆடிய மகிந்தா கொன்றுகுவித்த உறவுகளை எங்கு புதைத்தான் என்று யாருக்கும் தெரியாது ஆனால் செய்தவர்களுக்கு தான் தெரியும்.
2009 ஆண்டு யுத்தம் முடிந்த பின் சில இடங்களில் மக்களை தங்கள் சொந்த இடத்துக்கு போக விடவில்லை காரணம் கேட்டால் உங்கள் ஊர்களில் வீதி (ரோட்) வேலைகள் நடப்பதாக கூறியுள்ளான் ஆனால் அந்த வேலைகளை இராணுவமும் சிங்கள மக்களும் தான் செய்தார்கள் ஒரு தமிழர் கூட இல்லை ஏன் தமிழன் இருந்தால் உண்மை வெளியில் வந்துவிடும் என்ன உண்மை என்று யோசிக்காதீர்கள் எம் உறவுகளை சுட்டு சுட்டு கொன்ற சிங்களவன் மூளையாக இறந்தவர்களின் உடல்களை நடு ரோட்டில் குழி தோண்டி புதைத்து விட்டான்.
புதைத்த இடங்கள் தெரியாமல் சீனாவின் உதவியுடன் நல்ல வீதிகள் அமைத்துவிட்டான் அதன் பிறகு தான் எம் மக்களுக்கு அனுமதி கொடுத்தான் சிங்களவன் உங்கள் இடங்களுக்கு போகலாம் என்று. அங்கு போனால் மக்களுக்கு மகிழ்ச்சி நல்ல வீதிகள் தங்கள் ஊருக்கு வந்து விட்டது  என்று. பாவம் மக்கள் தமக்காக போராடியவர்களின் உடல்களுக்கு மேல் தான் நாம் நடக்கின்றோம் என்று இது வரை தெரியாது.
உதாரணமாக நீங்கள் மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழி பற்றி அறிந்து இருப்பார்கள் அங்கு எடுக்கப்பட்ட எழும்புக் கூடுகள் வீதியை தோண்டி தான் எடுக்கப்பட்டது வீதி வேலை செய்ய வந்தவர்கள் தோண்டும் போது எழும்புகள் வந்ததால் அவை கண்டுபிடிக்கப் பட்டது அதிலும் தமிழர்கள் இருந்ததால் தால் அந்த விடையம் வெளியில் வந்தது.
இப்போது நாங்கள் எங்க போய் தோண்டுவது வீதியை விடுவார்களா வீதியை தோண்ட எந்த வீதியை தோண்டுவது ஆனால் நடு வீதியில் குழி தோண்டி எம் மக்களை புதைத்தது உண்மை ஆனால் எங்கு என்று தான் தெரியாது மக்கள் குடியேற முதல் வீதி வேலைகள் முடிந்து இருந்தால் கட்டாயம் அங்கு உடல்களின் எச்சங்களை காணலாம் ஆனால் யாரும் அனுமதி தர மாட்டார்கள் அனுமதி கேட்டால் கேட்டவனுக்கு மனநோய் என்பான் உலகிற்கு சிங்கள காடையன் என்ன செய்வது இதற்கு காரணம் நாங்கள் தான் ஒற்றுமையில்லாமல் தமிழனை தமிழன் காட்டிக்கொடுத்ததால் தான்.
எல்லாம் தலைவிதி என்று இருப்பதா இல்லை மறுபடியும் ஆயுதம் ஏந்துவதா…?
ஒரு நாள் எல்லாவற்றிற்கும் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் உள்ளோம் இதற்கு தலைவரின் வருகையே பதில் சொல்லும்.
நன்றி.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
 யாழ்காந் தமிழீழம்