download (62)

அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது தாக்குதல்

அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது 2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட இழப்பு 400 கோடி ரூபாவுக்கும் மேல் என தெரியவந்துள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு 07.03.16 அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இத்தகவல் தெரியவந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது வானில் இருந்தும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்தியதன் காரணமாக 10 விமானங்கள் முற்றாக அழிந்து போனதுடன் 6 விமானங்கள் பாதியளவில் சேதமடைந்தன.

விடுதலைப்புலிகளின் தற்கொலை போராளிகள் நடத்திய தாக்குதல் காரணமாக 14 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி அனுராதபுரம் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தினர். இலங்கையில் 30 வருடகால போரில், புலிகளின் இந்த தாக்குதல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரப்பரப்பாக பேசப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் மேற்கொண்டிருந்தனர்.

(www.eelamalar.com)