ஒரு தலைவன் என்பவன் தானாக உருவாவதில்லை. மக்களே தங்களுக்கான தலைவன் யார் என தீர்மானிக்கிறார்கள்…!

நல்ல தலைவன் மக்கள் வலி உணர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து தன்னை அர்ப்பணித்து உண்மையாக நேர்மையாக அஞ்சாமல் வலிமையாக மக்களுக்காக போராடுகின்ற பொழுது மக்கள் தமது தலைவனாக அவனை போற்றி மதித்து விரும்பி அடையாளம் காண்கிறார்கள்.

தமிழீழ தேசிய தலைவரின் தன்னடக்கத்திற்கு ஆதாரமாக இந்த நிகழ்வு.

தேசியதலைவரிடம் 2002-ம் ஆண்டு நேர்காணலில்
கேட்ட கேள்வி இது.

கேள்வி : ”தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே ?

பதில் : “எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது.
நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”.

!!…தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்…!

போராட்டத்தை தலைவர் பார்த்து கொள்வார் என அவர் தோளில் பாரம் சுமத்தி விட்டு வெறும் பார்வையாளர்களாக இருப்பது பெரும் தவறு என்பதையும் .வரலாற்றை எழுதும் பணி ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதையும் எளிமையாக எடுத்து சொன்ன தன்னடக்கம் உள்ள தமிழ் தலைவர் சிந்தனையில் எம்மை செதுக்கி கொள்வோம்!

நன்றி
“செந்தமிழினி”