எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி   ஜனவரி இறுதி பகுதியில்   பிற்போடப்பட்டுள்ளது.

எழுக தமிழ் பேரணி பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் நிகழ்வு நடைபெறும் நிகழ்விற்கு அண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உழவர் தினத்தைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் தைப்பொங்கல் விடுமுறை நாளாக வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியதால் எதிரிவரும் 21ஆம் நாளை பாடசாலை நாளாக கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எனவே, குறித்த இரண்டு நிகழ்வுகளுக்கு முன்னுரிமையளித்து எழுக தமிழ் பேரணியை பிற்போட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.