22

எழுதாத கவிதை என்ற தனது இறுதிக் கவிதையில் கப்டன் வானதி இவ்வாறு குறிப்பிடுகின்றார்

“எழுதுங்களேன் ! நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன் ஏராளம் எண்ணங்களை எழுத எழுந்து23 வர முடியவில்லை எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்” 1991 ஆனையிறவுச் சமரின் போது இந்தக் கவிதையை கப்டன் வானதி எழுதிக்கொண்டிருந்தபோது அவர் அருகில் இருந்த போராளி நாதினி , 2000ல் ஆனையிறவு மீட்கப்பட்ட பின்னர் தனது முதலாவது கவிதையை “எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் எனும் உன் கவிதை எழுதப்பட்டு விட்டது. உப்பு வெளியில் உருகிய உங்கள் உடல்கள் மீது எமது வீரர்கள் எழுதாத உன் கவிதையை எழுதி முடித்தனர்” என்று எழுதி ஆரம்பிக்கின்றார். வானதியின் கவிதை எழுதப்பட்டு, பின்னர் 2000ல் ஆனையிறவு மீட்கப்படும் வரை 9 ஆண்டுகளும் இந்தக் கவிதை வைராக்கியமாக நாதினியின் மனதில் சூலிரிந்திருக்கின்றது போலும்.

(WWW.EELAMALAR.COM)