உறவுகளை நினைவுகூர்வதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது – மங்கள சமரவீர!

download-1

போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கத்தினால் கூட தடுத்து நிறுத்தமுடியாது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்கில் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், மாவீரர் தினம் அனுட்டிக்க அனுமதிக்கமுடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பாக ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது.

இந்நிலையில் அது தொடர்பாகத் தெரிவிக்கையில், ‘நான் அவர் என்ன கூறினார் என்பதைப் பார்க்கவில்லை. ஒரு வேளை அவர் நினைவுகூரலை விரைவில் வரவுள்ள மாவீரர் தினம் என எண்ணிக்கொண்டு பேசுகின்றார் என எண்ணுகின்றேன். மறுமுனையில் ஒவ்வொரு தனிப்பட்ட தாய்மாரும் மனைவிமாரும் குடும்பத்தினரும் தமது இறந்தவர்களை நினைவுகூருவதை எந்தவகையிலும் நிறுத்த முடியாது. அது ஒரு தனிப்பட்ட பிரத்தியேக செயல். அந்த வகையில் ஒருவர் தனது துயரை நினைவுகூரும் நாளில் அதனை எங்கனம் அரசாங்கத்தினால் நிறுத்தமுடியும் என நான் எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

(www.eelamalar.com)