“பிரபாகரன்” என்ற பெயர் தமிழன் சுப்ரபாதம்
உன்னிடம் துப்பாக்கியை நீட்டுபவனிடம் நீ கையெடுத்து கும்பிடாதே நீயும் துப்பாக்கியை நீட்டு என்றாயே நிராயுதபாணிகளாக நின்ற இத்தனை அப்பாவி மக்களை கொன்றொழித்தானே ஏன் அண்ணா நீ மௌனம் காத்தாய் ????
அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு என்றாயே பால்மணம் மாறாத செஞ்சோலை பிஞ்சுகளின் மீது குண்டுவீசி கொன்றானே அதுக்கு பலிவாங்கும் விதமாக நீயும் குறைந்தது இரண்டு சிங்கள பாடசாலை மீதல்லவா தாக்குதல் நடத்தியிருக்கவேணும் ஏன் அண்ணா நீ அதை செய்யவில்லை ????
சிங்கள தேசத்தின் இதய பகுதியான கொழும்பில் கட்டுநாயக்கா விமானதளத்தில் புகுந்து இத்தனை விமானங்களை உடைத்தெறிய தெறிந்த உனக்கு ஒரு சிங்கள விமான நிலைய ஊழியனையோ அல்லது ஒரு சிங்கள விமான பணிப்பெண்ணையோ கொன்றொழிக்க தெறியவில்லையா ஏன் அண்ணா நீ அதைச் செய்யவில்லை ????
எத்தனை எத்தனை உன் தங்கைகளை பிள்ளைகளை பாலியல் வான்புணவுக்கு உட்படுத்தி கொடுரமாக கொன்றானே அதுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நீயும் உன் போராளிகளுக்கு சிங்களப் பெண்களையும் வான்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றொழிக்க கட்டளை இட்டிருக்கலாமே ஏன் அண்ணா நீ அதை செய்யவில்லை ???? இவ்வளவுக்கு பிறகும் வான் கரும்புலிகளிடம் உங்கள் இலக்கு பிழைத்தாலும் பரவாயில்லை குழந்தைகள் மீதோ வழிபாட்டு தளங்கள் மீதோ பொதுமக்கள் மீதோ தவறியும் தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்று சொல்லி கண்ணீர் மல்க அவர்களை அனுப்பி வைத்தாயே ஏன் அண்ணா எதிரி எங்கட பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்றொழித்து முன்னேறி வந்தானே நீயும் அவங்கட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த ஏன் அண்ணா அனுமதிக்கவில்லை ????
சர்வேதேசம் உன்னை பயங்கரவாதி,தீவிரவாதி என்றல்லவா கூறுகின்றது தீவிரவாதி என்பவன் பேருந்து நிலையம்,ரயில் நிலையம் கோவில்கள்,மசூதிகள,தேவாலயங்கள் புத்தவிகாரைகள்,இப்படிபட்ட இடங்களில் குண்டுவைத்து பொதுமக்களையல்வா கொன்றொழித்திருக்க வேணும் ஏன் அண்ணா நீ அதைச்செய்யவில்லை ????
இறுதியாக உறுதியாக ஒன்று மட்டும் சொல்கின்றேன்
உன்னைப்போன்ற தலைவனை
உன்னைப்போன்ற வீரனை
உன்னைப்போன்ற தேசப்பற்றாளனை
உன்னைப்போன்ற நேர்மையாளனை
உன்னைப்போன்ற ஒழுக்க சீலனை
உன்னைபோன்ற சிந்தனையாளனை
உன்னைப்போன்ற அர்பணிப்பாளனை
உன்னைப்போன்ற மனிதநேயனை
உன்னைப்போன்ற யோக்கியனை
உன்னைப்போன்ற பண்பாளனை
உன்னைப்போன்ற செயல் வீரனை
உன்னைப்போன்ற தியாகியை
உன்னைப்போன்ற அர்பணிப்பாளனை
உன்னைப்போல் தமிழை நேதிதத்தவனை
உன்னைப்போல் தமிழரை நேசித்த தலைவனை
இனி எழுதப்படப்போகும் எந்த வரலாறும் தரிசிக்க போவதில்லை இது மட்டும் உறுதி.நீ பிறந்த தமிழினத்தில் பிறந்தது நாங்கள் பெற்ற வரம்.உந்தன் காலத்தில் வாழ்வது எங்கள் பூர்வஜென்ம புண்ணியம். அநீதிகளை கண்டு கல்லாய் இருக்கும் கடவுளைவிட அதை தடுக்க போராடிய நீ கடவுளைவிட நூறு மடங்கு மேல்.உன் பாதம்பட்ட மண்தான் எங்கள் திருநீறு.நீ உச்சரிக்கும் வார்த்தைகள்தான் எங்களுடைய வேதம் “பிரபாகரன்” என்ற பெயர் தமிழன் சுப்ரபாதம்.
“தமிழரின்தாகம் தமிழீழ தாயகம்”
-பிரபாசெழியன்