Fotor092119194

ஏழாம் நாளாச்சு
ஏக்கமே எம் மூச்சாச்சு!

குருதி
காய்கின்றது
குரல் வளை வறண்டு
குற்றுயிர் போகின்றது!

திலீபா
நின் நிலை
நாம் காணும்
கொடுமை பார்த்தாயா!

விடுதலை
நெருப்பேந்தி
தீயாய் நீ உருகுநிலை
திசையறிய உறவுகள் நாம்!

இந்திய
ஏகாந்தம் உன்னுயிரை
எடுத்திட எமனாட்டம்
வல்லூறாய் வட்டமிட்டே
வலம் வருகுது நல்லூரான்
வீதி எங்கும்!

குரல் வளை
நீ அடைக்க
கூக்குரல் எழுப்பினாய்
உன் கோரிக்கையை
கேளிக்கையாய்
குதறிய வல்லரசு
கும்மாளமிட்டே கூத்தாடியது இலங்கையுடன்!

எத்தனை தடையும்
என் உயிருக்கு முன்
நிகரில்லை என்றே
நீ கிடந்தாய்!

கொஞ்சம் கொஞ்சமாய்
உன் உறுப்புக்களும்
ஓய்வு எடுத்திட உறுதி கொண்டது!

நாளும்
எமன் பாசக் கயிற்றை
வீசிட வந்தான் வீதியிலே
சுற்றம் சூழ் மக்கள்
சூழுரைக்கும் உன் பெயர் கண்டு
நின் பணி மறந்தானடா எமனும்
நாளை வருவேன் என
எட்டாவதூ நாளுக்காய் அவன் “”””

தொடரும்!

ஈழவன் தாசன்!