ஐநா 72ஆவது கூட்டத்தொடருக்கான உபதலைவராக ரொகான் பெரேரோ தெரிவு!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடருக்கான உபதலைவர் பதவி சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐநா பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரை நடைபெறவுள்ளது.
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தி உப தலைவர் பொறுப்பை சிறிலங்கா வகிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
72ஆவது கூட்டத் தொடரின் உப தலைவராக சிறிலங்கா சார்பான உப தலைவரான ஐநாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொகான் பெரேரா செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.