ஐ.நாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்: சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் காரியாலயத்தில் பணியாற்றும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோத்தபாய தலைமையிலான எளிய அமைப்பினால் கொழும்பில் 19.12.17 நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

பலவந்தமாக தடுத்து வைத்தலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீ.கே.பீ தசாநாயக்கவின் புதல்வி அவர்களை சந்தித்து, புலிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

எனினும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என ரியர் அட்மிரால் சரத் வீரசேகரகோரிக்கை விடுத்துள்ளார்.