ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் – 2ஆவது நாள்
ஐ நா நோக்கி பிரித்தானியாவிலிருந்து நேற்று புதன்கிழமை ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் இன்று பெப்ரவரி 5ஆம் நாள் வியாழக்கிழமை 2ஆவது நாளாகத் தொடர்கிறது.
தமிழீழ மக்கள் கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் சிறீலங்காவின் விடுதலை நாளாகிய பெப்ரவரி 4ஆம் நாள், (நேற்று) மாலை 4 மணியளவில் ஆரம்பமாகி பின்னர் மாலை 6 மணி 30 நிமிடமளவில் போராட்டம் நிறைவடைந்த இடமான westminister நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்தே இன்று 2ஆவது நாள் போராட்டம் ஆரம்பமானது.
இக்காலை நேர சுடர் பயணம் Westbourne Park இல் பிற்பகல் 2 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதன்போது Conservative கட்சியைச் சேர்ந்த Ms Lindsey Hall, Labour கட்சியைச் சேர்ந்த Westminister வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் Ms Karen Buck ஆகியோரின் செயலகங்களில் மனுக்களும் கையளிக்கப்பட்டன. இப்போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிய துண்டுப் பிரசுரங்களும் மக்களிடம் கொடுக்கப்பட்டன.
பிற்பகல் 2.45 அளவில் மீண்டும் ஆரம்பமான இன்றைய விடுதலைச்சுடர் போராட்டம் South Kensington, Chelsea ஆகிய பகுதிகள் உட்பட பல இடங்கள் ஊடாகச் சென்று Fulham என்னும் இடத்தில் மாலை 6 அளவில் நிறைவு பெற்றது. கடுங்குளிரில் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் அவ்வப்பகுதி மக்களும் இணைந்து கொண்டனர்.